ரவி சாஸ்திரியின் யோசனையை கையிலெடுத்த பி.சி.சி.ஐ – விராட் கோலி விடயத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் இருந்து வந்ததால் அவர் மீது பெரிய விமர்சனம் எழுந்தது. அதோடு அவரது கேப்டன்சியிலும் இந்திய அணி ஐசிசி தொடர்களை கைப்பற்றாததன் காரணமாக ஏகப்பட்ட அழுத்தங்களை சந்தித்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் தனது கேப்டன் பதவியை துறந்தார். அதனை தொடர்ந்து தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

Kohli

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் அணியிலும் சரி விராட் கோலி மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளார் என்று கூறலாம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வரும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் தனது ஃபார்மை மீட்டு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடைபெற்றுவரும் பதினைந்தாவது ஐபிஎல் சீசனில் இதுவரை பெங்களூர் அணி விளையாடிய 9 போட்டிகளிலும் பங்கேற்ற விராட் கோலி வெறும் 128 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இரு முறை அவர் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறி உள்ளதால் அவரது பேட்டிங் பார்ம் தற்போது மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அவரின் இடம் சற்று கடினமாகும் என்று தெரிகிறது.

Virat Kohli vs CSK

ஏற்கனவே பிசிசிஐ விராட் கோலியின் பேட்டிங் பார்ம் மீது ஒரு கண் வைத்து இருக்கும் வேளையில் அவர் இவ்வாறு தொடர்ந்து சொதப்பி வருவது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்து வரும் வேளையில் அவருக்கு கட்டாய ஓய்வு தேவை என்றும் அதன் காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியில் அவர் விலகி நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பினால் சிறப்பாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரவி சாஸ்திரியின் இந்த கருத்து சரியான ஒன்று என்று உணர்ந்த பிசிசிஐ தற்போது அவரது முடிவை கையிலெடுத்து இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியிலிருந்து விராட் கோலியை மட்டுமல்லாது ரோகித் சர்மா, பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளது.

இதையும் படிங்க : இனிமே கஷ்டம் தான். விராட் கோலியின் விடயத்தில் கறார் காட்டும் பி.சி.சி.ஐ – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

மேலும் இந்த ஓய்வு மனரீதியாக அவர்கள் தயாராக சரியாக இருக்கும் என்பதனால் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பார்ம் இன்றி பரிதவித்து வரும் கோலி நிச்சயம் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்றும் அதன் பிறகு கிடைக்கும் ஓய்வை சரியாக பயன்படுத்தி மீண்டும் பலமாக இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement