இனிமே கஷ்டம் தான். விராட் கோலியின் விடயத்தில் கறார் காட்டும் பி.சி.சி.ஐ – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

kohli
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடும் விதத்தை வைத்து எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு நடைபெறும் என்பதே முதன்மை கருத்தாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சீனியர் வீரர்கள் சிலர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் பல இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Virat Kohli vs CSK

- Advertisement -

இதன் காரணமாக உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வில் பல்வேறு சிக்கல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்பதிலும் பெரிய அளவில் குழப்பம் உள்ளது. அதனால் எந்தெந்த வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக விளையாடி வரும் விராட் கோலியின் பார்ம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 128 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் இரண்டு முறை அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி உள்ளதால் அவரது பேட்டிங் பார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது.

Virat Kohli

இதன் காரணமாக அவர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : கோலி மிகச்சிறப்பான வீரர்தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது தற்போதைய பேட்டிங் பார்ம் மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதனால் உலக கோப்பையில் அவரை சேர்ப்பது குறித்து மிகப் பெரிய பிரச்சனையே வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஷாக்கை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் மிகப்பெரிய வீரரான கோலி இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக தனது பங்களிப்பை அளித்து வந்துள்ளார். ஒருவேளை அவர் டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்படா விட்டால் நிச்சயம் அது ஒரு பெரிய சர்ச்சையாகவே மாறும்.

இதையும் படிங்க : தொடர் வெற்றி, டேபிள் டாப்பர் ஆனால் பயமா இருக்கு! வெற்றிநடை போடும் குஜராத் கேப்டன் பாண்டியாவின் கவலை

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மாவை தொடர்பு கொண்டு கேட்கையில் : அவர் பதில் ஏதும் சொல்லாமல் இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பி.சி.சி.ஐ-க்கும் விராட் கோலிக்கும் இடையே தற்போது பனிப்போர் நிலவுவதாகவும், நிச்சயம் விராட் கோலி விஷயத்தில் பிசிசிஐ கறார் காட்டும் என்றும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement