கோலி மற்றும் ரவி சாஸ்திரிக்கு நடக்கவுள்ள ரெய்டு – பி.சி.சி.ஐ மீட்டிங்கில் கேட்கப்பட இருக்கும் கேள்விகள் இவைதான்

ravi-koli-3
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐ வட்டாரம் தகவலை வெளியிட்டது.

ravi koli 2

- Advertisement -

அதன்படி பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கோலியிடம் விடுமுறை முடிந்தவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த பிசிசிஐ திட்டம் வகுத்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருங்காலத்தில் எப்படி செயல்படுவது எனவும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் ரவி சாஸ்திரி மற்றும் கோலியிடம் பல கேள்விகளை தொடுக்க பிசிசிஐ தயாராக உள்ளது.

அதன்படி முக்கியமான கேள்வியாக ஏழாவது இடத்தில் தோனியை அரையிறுதிப்போட்டியில் இறக்க காரணம் என்ன ? மேலும் வீரர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவுகளை எடுத்தீர்களா ? இல்லை தனிப்பட்ட விதத்தில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இந்த முடிவுகளை எடுப்பீர்களா ? என்ற கேள்வி கேட்கப்பட உள்ளது.

Dhoni

ஒன்றரை ஆண்டுகளாக நான்காவது இடத்திற்கு ராயுடுவை தயார் செய்து உலகக்கோப்பை அணியில் அவரைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வியும் கேட்கவுள்ளது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோற்க காரணம் என்ன ? மிடில் ஆர்டரில் சங்கர் காயமடைந்தபோது தொடக்க வீரரான மயங்க் அகர்வால் எடுத்த காரணம் என்ன ?

நான்காம் நிலை வீரரை உறுதி செய்யாமல் உலகக்கோப்பை சென்றதற்கான காரணம் ? மேலும் கோலி மற்றும் ரவி சாஸ்திரிக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளதா ? இந்திய அணியில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் யார் யார் ? என்ற கேள்விகளும், அடுத்த வருடம் நடக்கும் உலகக்கோப்பை டி20 போட்டிக்காக அணியின் திட்டம் குறித்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement