- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சறுக்கலை சந்திக்கப்போகும் விராட் கோலி, ரோஹித் சர்மா.. முன்னேற்றம் காணப்போகும் சுப்மன் கில் – பி.சி.சி.ஐ முடிவு

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஆண்டுதோறும் வீரர்களின் தகுதிக்கு ஏற்ப ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை இன்னும் சில தினங்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில் குறிப்பிட்ட சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று சில தகவல்கள் தற்போது அதிகளவில் வைரலாகி வருகின்றன.

வெளியாகப்போகும் 2025-26 ஊதிய ஒப்பந்த பட்டியல் :

அந்த வகையில் வெளியான அறிவிப்பின்படி : இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தங்களது வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடும் என்றும் அதில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு சில முன்னேற்றங்களை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இளம் வீரர்கள் பலருக்கு ஒப்பந்த ஊதிய பட்டியலில் உயர்வு கிடைக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

அதே வேளையில் சீனியர் வீரர்கள் சிலர் ஒப்பந்த பட்டியலில் சறுக்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நடப்பு ஆண்டில் ஏ+ பிரிவில் இடம் பெற்றிருந்தாலும் அடுத்த ஆண்டிற்கான ஊதியப்பட்டியலில் அவர்கள் அந்த பட்டியலில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஏ பிரிவில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் அவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். அதனால் அந்த சறுக்கல் நிச்சயம் அவர்களுக்கு ஏற்படும் என்று தெரிகிறது. அதேபோன்று ஏ+ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பின்னடைவை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி ஒருபுறம் ஊதிய பட்டியலில் சீனியர் வீரர்கள் சறுக்களை சந்திக்க நேரும் வேளையில் இளம் வீரரான சுப்மன் கில் ஏ+ பிரிவிற்கு தரம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவரை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும் கூறுகிறது.

இதையும் படிங்க : தனது விக்கெட்டை எடுத்த இளம் வீரருக்கு விராட் கோலி கொடுத்த அன்பு பரிசு – விவரம் இதோ

அதேபோன்று இந்திய அணிக்காக இரண்டு வடிவ போட்டிகளில் விளையாடி வரும் குறிப்பிட்ட சில இளம் வீரர்களுக்கும் ஒப்பந்த ஊதிய பட்டியலில் தரம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஊதிய பட்டியலில் எந்தெந்த வீரர்கள், எந்தெந்த இடத்தை பிடிக்க போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -