சி.எஸ்.கே அணிக்கு ரெய்னா திரும்புவாரா ? துபாய் மீண்டும் செல்வாரா ? – பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல்

Raina
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றம் செய்யப்பட்டு துவங்க தயாராக இருக்கிறது. இம்மாதம் 19ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் நம்பர் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான முறைப்படியான அட்டவணையும் இன்று ஐ.பி.எல் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் துபாய் சென்ற சென்னை அணியில் ரெய்னாவும் பயணித்திருந்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டது. முதலில் சென்னை அணியில் 13 கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ரெய்னாவும் சொந்தக் காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகினார். இந்த விடயங்கள் சி.எஸ்.கே அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

முதலில் சொந்த காரணங்கள் என்று கூறப்பட்டாலும் பிறகு அவருக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையேயான மனக்கசப்பின் காரணமாகவே அவர் இத்தொடரில் இருந்து வெளியேறினார் என்றும் பல்வேறு சர்ச்சைகள் வெளியானது. இதற்கெல்லாம் சிஎஸ்கே நிர்வாகமும், ரெய்னாவும் அடுத்தடுத்து தங்களது கருத்துக்களை தெரிவித்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் அண்மையில் பேசிய ரெய்னா கூறுகையில் :

Raina

இந்தியாவில் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன் இருந்தாலும் இப்போதும் வலைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். சென்னை அணியின் முகாமிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்று கூறியிருந்தார். அதனால் ரெய்னாவின் ரசிகர்கள் அவர் மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகைக்கு பேட்டியளித்த பிசிசி நிர்வாகி ஒருவர் சுரேஷ் ரெய்னா குறித்து தெரிவித்த கருத்தில் : ரெய்னா நாடு திரும்பியதற்கான உண்மையான காரணம் என்னவென்று ஆராயப்பட வேண்டும். அவர் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக திரும்பினாரா ? அல்லது தோனியுடன் பிரச்சினையா ? அல்லது சிஎஸ்கே நிர்வாகத்துடன் பிரச்சினையா ? ஆராய வேண்டும்.

Raina-1

மேலும் விடயம் எதுவாக இருந்தாலும் அவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரா ? என்று தெரிய வேண்டும். அப்படி அவர் மன அழுத்தத்தில் இருந்தால் நிச்சயம் அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது. யாருக்கேனும் ஏதும் பிரச்சினை ஆனால் யார் பொறுப்பேற்பது என அவர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement