நாட்டை விட அது தான் முக்கியம்னா உலககோப்பைய மறந்துடுங்க, இல்ல அந்த முடிவ எடுங்க – பிசிசிஐ’யை விளாசிய ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது. ஆனால் பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.

Indian Batters

- Advertisement -

குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் ஆரம்பத்திலேயே சரிந்தது முக்கிய காரணமாக அமைந்ததை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதிலிருந்து கொஞ்சமும் முன்னேறாமல் இந்த போட்டியிலும் அதே போல ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

ஐபிஎல் முக்கியமா:
அதனால் 71/5 என சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, தாக்கூர் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 270/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததால் 444 என்ற மெகா இலக்கை துரத்தும் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தடுமாறுவதால் வெற்றி பெறுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் காலம் காலமாக தடுமாறுவது வழக்கமாகும்.

IND vs AUS

எனவே அதில் அசத்துவதற்கு முன்கூட்டியே பயணித்து முழுமையாக தயாராவது அவசியமாகும். அந்த நிலைமையில் கடந்த 2021 ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றி முழுமையாக தயாராகி களமிறங்கிய நியூசிலாந்து வென்றது. மறுபுறம் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு 10 நாட்கள் முன்பாக இங்கிலாந்துக்கு சென்று வெறும் வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு நேரடியாக ஃபைனலில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்தியா தோற்றது.

- Advertisement -

ஆனால் இம்முறையும் அதிலிருந்து பாடத்தை கற்காமல் அதே தவறை செய்த இந்தியா பயிற்சி போட்டியில் கூட விளையாடாமல் ஃபைனலில் களமிறங்கியது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீசிய பவுலர்கள் இந்த ஃபைனலில் முழுமையாக தயாராகாமல் களமிறங்கியதால் ஒரே நாளில் 17 ஓவர்களை வீசும் போது சோர்வடைந்தது 469 ரன்கள் கொடுத்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கியது எந்த பயனையும் கொடுக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Shastri

அதனால் இனிமேல் ஃபைனலுக்கு முன்பாக பயிற்சி போட்டிகளில் விளையாடும் அவகாசத்தை வீரர்களுக்கு கொடுக்காமல் ஐபிஎல் தான் முக்கியம் என்று பிசிசிஐ நினைத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையை மறந்து விட வேண்டுமென விமர்சிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் உங்களுடைய முன்னுரிமைகளை முடிவு செய்ய வேண்டும் அல்லவா? உங்களுடைய முன்னுரிமை என்ன? இந்தியாவா அல்லது ஐபிஎல் தொடரா? என்பதை முடிவெடுங்கள். ஒருவேளை ஐபிஎல் என்று நீங்கள் முடிவெடுத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மறந்து விடுங்கள்”

இதையும் படிங்க: WTC Final : மூன்றாவது அம்பயர் அளித்த தவறான அவுட். தனது பங்கிற்கு சுப்மன் கில் கொடுத்த பதிலடி – வைரல் புகைப்படம்

“இது முக்கியம் என்றால் விளையாட்டின் பாதுகாவலராக இருக்கும் பிசிசிஐ ஐபிஎல் ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலனை கருதி “தேவைப்பட்டால் ஒரு வீரரை வெளியே எடுக்கும் உரிமை உண்டு” என்ற விஷயத்தை கொண்டு வர வேண்டும். இதை விதிமுறையின் முதல் புள்ளியாக குறிப்பிட்டு பின்னர் ஐபிஎல் நிர்வாகங்களிடம் முதலீடு செய்வது பற்றி முடிவெடுக்க சொல்லுங்கள். இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நீங்கள் தான் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட்டின் பாதுகாவலராக உள்ளீர்கள்” என்று கூறினார்.

Advertisement