WTC Final : மூன்றாவது அம்பயர் அளித்த தவறான அவுட். தனது பங்கிற்கு சுப்மன் கில் கொடுத்த பதிலடி – வைரல் புகைப்படம்

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியானது இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்திய அணியின் கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற வேண்டுமெனில் இந்திய அணியை ஆல் அவுட்டாக்க வேண்டும் இப்படி இந்த கடைசி நாள் ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றி பெற சமமான வாய்ப்பு உள்ளதால் போட்டி இன்னும் கூடுதல் சுவாரசியத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்த பின்னர் 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய இந்திய அணியில் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆரம்பித்தனர்.

ஆனால் 18 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஆட்டமிழந்த விதம் தற்போது சர்ச்சைப்படுத்தி உள்ளது. ஏனெனில் ஸ்காட் போலந்து வீசிய பந்தில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். ஆனால் அந்த பந்தை பிடித்த கேமரூன் கிரீன் பந்தை தரையில் உரசியபடியே பிடித்தார். ஆனாலும் அதனை அவுட் என்று களத்தில் இருந்த அம்பயர் அறிவித்தார்.

- Advertisement -

ஆனாலும் திருப்தி அடையாத சுப்மன் கில் மூன்றாவது அம்பயரின் உதவியை நாடினார். மூன்றாவது அம்பயரும் பலமுறை இந்த கேட்சை ரீப்ளே செய்து பார்த்துவிட்டு அவுட் என்று தெரிவித்தார். ஆனால் பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்ததால் பல்வேறு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் மூன்றாவது அம்பயரின் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : WTC Final : டிராவிட் ஒரு வீரராக ஜாம்பவான் ஆனா பயிற்சியாளராக ஜீரோ – முன்னாள் பாக் வீரர் வெளிப்படை விமர்சனம்

இந்நிலையில் இப்படி சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்த சுப்மன் கில்லும் தனது ஆதங்கத்தை டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் : பந்து தெளிவாக கீழே படும் புகைப்படத்தை பதிவிட்டு தலையில் அடித்துக் கொள்ளும் ஒரு ஸ்மைலியுடன் ஜூம் செய்து பார்க்குமாறு மூன்றாவது அம்பயரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement