WTC Final : டிராவிட் ஒரு வீரராக ஜாம்பவான் ஆனா பயிற்சியாளராக ஜீரோ – முன்னாள் பாக் வீரர் வெளிப்படை விமர்சனம்

dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. அப்போட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 163, ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்கள் எடுத்த உதவியுடன் 469 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பதிலடி கொடுப்பதற்கு பதிலாக சொதப்பலாக செயல்பட்டு 296 ரன்களுக்கு சுருண்டது.

சொல்லப்போனால் ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 71/4 என சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, தாக்கூர் 51 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடி முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவியினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 270/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து 444 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளதால் இப்போட்டியில் இந்தியா வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டிராவிட் ஜீரோ பயிற்சியாளர்:
முன்னதாக இந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து அழுத்தத்தை தாமாகவே எதிரணி பக்கம் திருப்பும் முடிவை எடுக்க தவறியதை கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அத்துடன் 4வது பவுலராக உமேஷ் யதாவை தேர்ந்தெடுத்து சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய ஓவல் மைதானத்தில் தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் அஸ்வினை கழற்றி விட்டதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் அந்த முடிவின் பின்னணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இருப்பதால் ரோகித்தை மட்டும் விமர்சிக்க வேண்டாம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். இந்நிலையில் ஒரு வீரராக ராகுல் டிராவிட் ஜாம்பவான் என்றாலும் பயிற்சியாளராக ஜீரோ தாக்கத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷீத் அலி விமர்சித்துள்ளார். தாம் ட்ராவிட்டின் ரசிகன் என்றாலும் பயிற்சியாளராக அவருடைய செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் 2 மணி நேரத்திற்காக கவலைப்பட்டு டாஸ் வென்று முதலில் பந்து வீசிய போதே இந்தியா தோல்வியை சந்தித்தனர். மேலும் ஐபிஎல் தொடரில் வீசுவது போல இந்தியாவின் பவுலிங் இருந்தது. குறிப்பாக முதல் நாள் உணவு இடைவெளியில் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்ததற்காக இந்திய பவுலர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். தற்போதைக்கு 4வது நாளில் ஆஸ்திரேலியாவை விரைவில் அவுட்டாக்கி 4வது இன்னிங்ஸில் மிராக்கள் நிகழ வேண்டும் என இந்தியா நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது”

“மேலும் 120 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த போது ரகானே, கோலி, ஜடேஜா ஆகியோர் மட்டுமே ஃபிட்டாக இருப்பதை நான் பார்த்தேன். இதர வீரர்கள் மிகவும் சோர்ந்து போய் விட்டனர். அதைவிட நான் ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய ரசிகன். ஒரு கிளாஸ் நிறைந்த வீரராக அவர் எப்போதுமே லெஜெண்ட். ஆனால் ஒரு பயிற்சியாளராக அவர் ஜீரோ. ஏனெனில் நீங்கள் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை தயாரித்து விளையாடி வெற்றி காண்கிறீர்கள்”

- Advertisement -

“ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் போது வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் தானே இருக்கிறது. எனவே அவர் என்ன நினைக்கிறார் என்பதை கடவுள் தான் அறிவார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரவி சாஸ்திரிக்கு பின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் பெரும்பாலான தொடர்களில் சோதனை முயற்சி என்ற பெயரில் அடிக்கடி வீரர்களை மாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தது ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: WTC Final : உச்சக்கட்ட பரபரப்பில் ஃபைனல், ஆஸிக்கு சவாலாக 5வது நாளில் விராட் கோலி – ரகானே இந்தியாவை காப்பாற்றுவார்களா?

மேலும் ஜாம்பவானான அவர் இந்தியாவுக்கு பயிற்சியாளராக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திறமை இருந்தும் சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் சொதப்பியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து இந்த ஃபைனலிலும் தோல்வியை கொடுக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement