வேண்டா வெறுப்பாக கொடுக்கப்பட்ட டெஸ்ட் கேப்டன்ஷிப், ரோஹித் சர்மா எப்போது நீக்கப்படுவார்? வெளியான பிசிசிஐ ரிப்போர்ட் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் அணியாக தரவரிசையில் ஜொலிக்க வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்தார்.

Kohli-and-Rohit

- Advertisement -

இருப்பினும் 2017 முதல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கோப்பையை வெல்ல முடியாததை போலவே இந்தியாவுக்காகவும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட ஐசிசி தொடரில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்ய தவறியதால் சந்தித்த கடுமையான விமர்சனங்களை நிறுத்த 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் தொடர்வதாக அறிவித்த அவரது தலைமையில் 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக இந்தியா தோற்றதால் அதிருப்தியடைந்த கங்குலி தலைமையிலான பிசிசிஐ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்துடன் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

ரோஹித்துக்கு எச்சரிக்கை:
அதனால் மனமுடைந்த அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் திடீரென ராஜினாமா செய்ததால் வேறு வழி தெரியாத பிசிசிஐ ஏற்கனவே 5 ஐபிஎல் கோப்பையை வென்ற காரணத்தால் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தது. அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் அசத்தி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நழுவ விட்டுள்ளது.

Ganguly

மேலும் இப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்தாமல் நம்பர் ஒன் பவுலரான அஸ்வினை பெஞ்சில் அமர வைத்து மோசமான முடிவை எடுத்து தோல்விக்கு காரணமான அவர் பதவி விலக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவை கேப்டனாக வழி நடத்த விரும்பிய ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் கங்குலி – ஜெய் ஷா ஆகியோர் தான் வேறு வழியின்றி வேண்டாவிருப்பாக டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மேலும் தற்போதைய நிலைமையில் அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் கேப்டனாக தொடர்வார் என்றும் டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் புதிய கேப்டனை பிசிசிஐ நியமிக்கும் என்றும் தெரிய வருகிறது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2022 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய போது பிசிசிஐயும் டாப் 2 நிர்வாகிகளும் (கங்குலி – ஜெய் ஷா) அவரை அந்தப் பொறுப்பை ஏற்க்குமாறு பேசி சம்மதிக்க வைத்தனர். ஏனெனில் அதே தொடரில் தற்காலிகமாக செயல்பட்ட கேஎல் ராகுல் கேப்டனாக தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை”

Rohit Sharma

“தற்போது ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. இருப்பினும் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் விளையாடுவாரா என்பது பெரிய கேள்வியாகும். ஏனெனில் 2025ஆம் ஆண்டு அத்தொடர் முடியும் போது அவர் 38 வயதை தாண்டியிருப்பார். எனவே தற்போதைய நிலைமையில் எஸ்எஸ் தாஸ் தலைமையிலான தேர்வுக்குழு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் அவருடைய கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் இடத்தைப் பற்றிய முடிவை எடுக்கும்”

இதையும் படிங்க:ஹாட்ரிக் ஃபைனலுக்கு தகுதி பெறுமா? 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இந்தியாவின் முழு அட்டவணை இதோ

“அந்த தொடருக்குப்பின் டிசம்பரில் நடைபெறும் தென்னாபிரிக்க தொடருக்கு முன் வேறு எந்த டெஸ்ட் தொடர்களும் இல்லை. எனவே இது பற்றி தேர்வுக்குழு முடிவெடுக்க போதிய நேரம் இருக்கிறது. அத்துடன் அந்த சமயத்தில் நியமிக்கப்பட காத்திருக்கும் புதிய தேர்வுக்குழு அது பற்றிய முடிவை எடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement