ஆஸ்திரேலிய தொடரை அடுத்து இந்தியாவில் அட்டகாசமான தொடர் – பக்கா பிளான் போட்ட பி.சி.சி.ஐ

BCCI
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகிய இரு தொடர்கள் முடிவடைந்த நிலையில் வரும் 17ம் தேதி முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது.

IND

- Advertisement -

இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஜனவரி மாதம் பாதியில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணி எந்த அணியுடன் மோத உள்ளது என்பது குறித்து பிசிசிஐ தற்போது தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்து அதாவது மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் போது கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது வரை கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறாத நிலையில் பிப்ரவரி மாதம் திட்டமிட்டபடி நிச்சயம் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 7ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெறும் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என பிசிசிஐ பொருளாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய மைதானமான “மோதிரா” மைதானத்தில் இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார் .அதுமட்டுமின்றி 5th t20 போட்டிகளிலும் இந்த மோதிரா மைதானத்தில் மட்டும்தான் நடைபெறும் என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Motera-1

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கின்றன. அதுமட்டுமின்றி 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் நற்செய்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Advertisement