டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா ? – பி.சி.சி.ஐ அறிவித்த ரூல்ஸ் இதோ

BCCI

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, வீரர்களுக்கு மத்தியிலும் கொரானா பரவியதை அடுத்த தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுள்ளது. ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் மீது சென்றிருக்கிறது. இந்த இறுதி போட்டி மற்றும் அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி இரண்டு தினங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது.

INDvsNZ

மொத்தம் 20 பேர் கொண்ட அணியுடன் மேலும் 4 கூடுதல் வீரர்களும், ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட உள்ளனர். கொரனா பரவலுக்கு மத்தியிலும் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், வீர்ர்களின் பாதுகாப்பு குறித்து பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர், அதுகுறித்து சில விஷயங்களை தெரியப்படுத்தியிருக்கிறார். அதுபற்றி அவர் கூறியதாவது, இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஜூன் 2-ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும். அவர்கள் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக,

- Advertisement -

வரும் 25 ஆம் தேதி முதல் 8 நாட்கள் வரை இந்தியாவின் பயோ பபுள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பார்கள். இந்த கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்த பிறகு அவர்கள் ஹோட்டல் அறையிலேயே கடுமையான தனிமைப்படுத்தலில் தங்க வைக்கப்பட்டு, மூன்று நாட்கள் கொரானா பரிசோதனைக்கு உடபடுத்தப்படுவார்கள். இந்தியாவில் தனிமைப்படுத்துதல் மற்றும் கொராணா சோதனை ஆகியவை முடிந்த பிறகுதான் இந்திய வீரர்கள் இங்கிலாந்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

IND

இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றபின், இங்கிலாந்து நாட்டின் விதிப்படி அங்கும் பத்து நாட்கள் தனிமைபடுத்துதலில் இருப்பார்கள். ஏற்கனவே இந்தியாவில் தனிமைப்படுத்துதலில் இருந்துவிட்டு வந்ததால், இந்த முறை அவர்கள் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி கொரானா பரிசோதனையும் நடத்தப்படும். இது ஒரு நீண்ட தொடர் என்பதால் இந்த முறை வீரர்கள் அவர்களின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் கொரனா தனிமைப்படுத்துதல் கட்டாயமான ஒன்றாகவே இருக்கும்.

- Advertisement -

மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்திய வீரர்கள் அனைவருக்கும் இந்தியாவிலேயே, முதல் கொரானா தடுப்பூசி போடப்படும். எனவே இரண்டாவது தடுப்பூசி அவர்களுக்கு செலுத்த இங்கிலாந்தில் போடப்படும். ஒருவேளை இதற்கு அவர்கள் சம்மதிக்க மறுத்தால், இந்தியாவிலிருந்து தடுப்பூசி எடுத்துவரப்பட்டு, இங்கிலாந்திலேயே இரண்டாவது தடுப்பூசி இந்திய வீர்ர்களுக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.

IND

இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைகிறது. இப்போட்டி முடிந்தவுடன், இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி முடிவடைகிறது.

Advertisement