உலககோப்பை அணியில் சஞ்சு சாம்சனை ஏன் சேர்க்கவில்லை? பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம் – ரசிகர்கள் அதிருப்தி

samson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியலானது நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பெரிதளவு மாற்றமில்லாமல் அதே வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Bhuvneswar Kumar INDIA

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சில வீரர்களுக்கு ஆதரவாக தற்போது இந்திய அணியின் இந்த தேர்வு குறித்து சில விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் கூட அதிரடியாக விளையாடக் கூடிய சஞ்சு சாம்சனை அணியில் தேர்வு செய்யாதது பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது.

மேலும் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பெற்றுள்ளதும், ரிசர்வ் பட்டியலில் கூட சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததும் பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்காதது குறித்து பிசிசிஐ தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது. அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் :

Sanju Samson 1

சஞ்சு சாம்சன் ஒரு திறமையான உலகத்திரமான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அணியின் காம்பினேஷனை வைத்து பார்க்கும் போது இந்திய அணியில் தற்போது அவர் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஏற்கனவே டாப் 5 இந்திய அணியில் மிகவும் பலமாக உள்ளதால் அந்த இடங்களில் நாம் எந்த ஒரு மாற்றமும் செய்யக்கூடாது.

- Advertisement -

அதே வேளையில் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை டாப் 5 பேட்மேன்களுக்கு பிறகு அணியில் பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேன்களே தேவை. அந்த வகையில் தான் தீபக் ஹுடாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் பிசிசிஐ தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க : கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க, சொதப்பல் இளம் வீரருக்கு ஆதரவாக பேசிய அசாருதீன் – கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த விளக்கத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் சஞ்சு சாம்சனை சேர்க்காதது குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனெனில் சமீப காலமாகவே ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவு சோபிக்காததாலும், எளிதாக விக்கெட்டினை இழந்து விடுவதாலும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்கலாம் என்று தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement