ஐ.பி.எல் தொடரில் பணியாற்றவுள்ள 4 பெஸ்ட் அம்பயர்கள். ஐ.சி.சி எலைட் பேனல் தேர்வு – லிஸ்ட் இதோ

Umpire
- Advertisement -

ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ படு மும்முரமாக வேலை செய்து வருகிறது. இதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவில் உயிர் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்தை தாண்டி வீரர்கள் வெளியே செல்லக்கூடாது அதில் பல விதிகளும் நடைமுறைகளும் கெடுபிடிகளும் பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீரர்கள் மட்டுமின்றி இந்தத்தொடரில் சம்மந்தப்பட்ட அனைவரும் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

IPL-1

- Advertisement -

இதுவரை கொரோனா டெஸ்டுக்கு மட்டும் சுமார் 10 கோடி ரூபாயை பிசிசிஐ செலவு செய்து இருக்கிறது. அதனை தாண்டி ஒவ்வொரு வீரருக்கும் தனி அறை, ஒவ்வொரு அணிக்கும் தனி ஹோட்டல் என பல்வேறு வேலைகள் நடந்து கொண்டு வருகிறது

இந்தத்தொடருக்காக மூன்று மைதானங்களில் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூன்று மைதானங்களில் மட்டுமே ரசிகர்கள் இல்லாமல் அனைத்து 60 போட்டிகள் நடைபெறும். இந் நிலையில் இதற்காக இந்த தொடர் முழுவதும் செயல்படுவதற்காக ஐசிசி எலைட் பேனல் நடுவர் குழுவில் உள்ள நான்கு பேரை கேட்டிருக்கிறது பிசிசிஐ.

Umpire

இந்த எலைட் பேனல் மொத்தம் 16 பேர் இருக்கிறார்கள். இதில் கிறிஸ் கஃபானி (நியூசிலாந்து), ரிச்சர்ட் எலிங்வொர்த் (இங்கிலாந்து), பால் ரீஃபெல் (ஆஸ்திரேலியா) மற்றும் நிதின் மேனன் (இந்தியா) சேர்ந்த இவர்கள் அனைவரும் வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இவர்களை தவிர மற்ற அனைவரும் இந்திய நடுவர்களாக இருப்பார்கள்.

umpire

இன்று ஐ.பி.எல் தொடரின் அட்டவணை வெளியாகும்போது போட்டி நடத்தப்படும் மைதானங்கள், அம்பயர்கள், போட்டிக்கான நேரங்கள் என அனைத்தும் முறைப்படி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement