இஷாந்த் மற்றும் ரோஹித்துக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் வைத்துள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Ishanth
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான பயிற்சியை மேற்கொண்டு வரும் இவர்கள் இருவரும் இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் பங்கேற்பது சிக்கலாகி உள்ளது.

ishanth

- Advertisement -

ஏனெனில் இந்த மாத இறுதிக்குள் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா சென்றால்தான் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அதற்கு பிறகு அவர்களால் பயிற்சி போட்டியிலும் சரி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் டிசம்பர் 8ஆம் தேதிக்கு பிறகுதான் ஆஸ்திரேலிய செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் முதல் இரு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிசிசிஐ தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான குவாரண்டைன் நாட்களை 14 நாட்களில் இருந்து குறைக்குமாறு அல்லது அதனை ரத்து செய்யுமாறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ வேண்டுகோள் விடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறும்போது :

bcci

நாங்கள் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறோம். கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இஷாந்த் மற்றும் ரோகித் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் கிரிக்கெட் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மதிப்பு வைத்திருக்கிறது. அவர்களிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று காத்திருக்கிறோம் என்று கூறினார்.

rohith 1

வழக்கமாகவே நாடு விட்டு நாடு செல்லும் போது 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியும். ஆனால் இஷாந்த் மற்றும் ரோகித் ஆகிய தொடர்ச்சியாக பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் அவர்களுக்கு சற்று தளர்ச்சி கொடுக்கலாம் என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஐபிஎல் தொடரிலும் சரி தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் சரி வெளியுலக சந்திப்பு இல்லாமல் அவர்கள் பாதுகாப்பு வளையத்தில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement