இந்திய வீரர்களுக்கு இந்த ஒரு சலுகையை மட்டும் தாங்க – ஆஸி கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்த பி.சி.சி.ஐ

BCCI
- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு மாதகால அளவிற்கு பெரிய தொடராக நடைபெற இருக்கும் இந்த தொடரானது நவம்பர் 27 ஆம் தேதி துவங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

INDvsAUS

- Advertisement -

இதற்காக மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் பல புது வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழக வீரரான தங்கராசு நடராஜன், வாசிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர். ரோகித் சர்மா காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இருந்து வருகின்றனர். இதற்காக உயிர் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் வீரர்களும் குடும்பத்தினரும் ஒன்றாக இருக்கின்றனர் யாரும் விதிமுறையை மீறக்கூடாது என்ற கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

anushka

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் வீரர்கள் மட்டும் வரவேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் வீரர்கள் ஏற்கனவே குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருந்து வருவதால் அவர்களையும் சேர்த்து அனுப்பி வைக்க பிசிசிஐ திட்டம் தீட்டியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இது தொடர்பான ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. குறைந்தது சில நாட்களுக்காவது தங்களது குடும்பத்தினருடன் இந்திய வீரர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

Advertisement