என்ன நடந்தாலும் இவரை ஐ.பி.எல் தொடரில் சேர்க்க முடியாது – மீண்டும் அதிரடி காட்டிய பி.சி.சி.ஐ

crick-BCCI
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர்ணனையாளர்கள் இடத்தில் அமர்ந்துகொண்டு எப்போது பார்த்தாலும் சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது மீண்டும் அந்த பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். எப்போதும் ஒரு சார்பாகவும் ஒரு சாராருக்கு ஆதரவாகவும் பேசி வருவதால் கடந்த வருடம் இவரை வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து பிசிசிஐ நீக்கியது.

Sanjay

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பிசிசிஐ சார்பாக சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்ற முன்னாள் வீரர்கள் வர்ணனை செய்து வருவார்கள். அதனை தாண்டி சுனில் கவாஸ்கர், எல் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், டீப் தாஸ்குப்தா, ரோஹன் கவாஸ்கர், ஹர்ஷா போக்லே, அஞ்சும் சோப்ரா முன்னாள் வீரர்கள் பலரும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர்,

சமீபகாலமாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மூளை பிரண்டு போய் பலரை பர்சனலாக தாக்கத் தொடங்கினார். பிரபலமான வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லே வை தனிப்பட்ட ரீதியாக தாக்கிப் பேசினார் இப்படி தொடர்ந்து இவர் மேல் புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக கடந்த வருடம் வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

Sanjay

மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ஐபிஎல் தொடர் கேட்டிருந்தார் சஞ்சய் மஞ்ரேக்கர் .ஆனால் தற்போது அதில் இருந்து நீக்கப்பட்டு, சேர்க்க முடியாது என்றும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

Sanjay

மற்ற வர்ணனையாளர்கள் போல் அல்லாமல் பெருந்தன்மை இல்லாமலும் சக பணியாளர்களை தனிப்பட்ட ரீதியில் தாக்கி பேசியும் வந்ததற்காக பிசிசிஐ இவருக்கு தண்டனை கொடுத்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின் போது கூட ஜடேஜா ஒரு ஆல்ரவுண்டரா ? என்று சர்ச்சையான கருத்தினை கூறி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement