உங்க இஷ்டத்துக்கு யாரையும் இங்கிலாந்துக்கு அனுப்பமுடியாது – இந்திய அணியின் வேண்டுகோளை மறுத்த பி.சி.சி.ஐ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது துவக்க வீரரான சுப்மன் கில் காயம் காரணமாக வெளியேற உள்ளதால் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்கப் போவது யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கில் இந்த தொடரில் இருந்து வெளியேறவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகிய இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்புமாறு தேர்வாளர்களுக்கு இந்திய அணி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகிய இருவரும் இலங்கை தொடருக்கான இந்திய அணியுடன் பயணித்து இருப்பதால் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

shaw-2

ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள அணியில் அபிமன்யு ஈஸ்வரன், கேஎல் ராகுல், மாயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக இருப்பதால் இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

agarwal 3

இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் குறித்து ப்ரித்வி ஷா அல்லது படிக்கல் ஆகியோரில் ஒருவர் தவானுடன் துவக்க வீரராக விளையாடுவார்கள் என்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அகர்வால் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் ரோஹித்துடன் விளையாடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement