- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உ.கோ தொடரால் பி.சி.சி.ஐ-க்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றுப் போட்டிகளில் இருந்து அரையிறுதி வரை எந்த போட்டியிலும் தோல்வியையே சந்திக்காமல் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பே அதிகமாக பார்க்கப்பட்டது.

பி.சி.சி.ஐ க்கு கிடைத்துள்ள வருவாய் :

ஆனால் இறுதி நேரத்தில் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியும் தகுதி பெற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும் உலகின் பணக்கார வாரியமாக பார்க்கப்படும் பிசிசிஐக்கு இந்த தொடரின் மூலம் பெரிய அளவு லாபம் கிடைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த கிரிக்கெட் வாரியமாக பார்க்கப்படும் பிசிசிஐ எப்பொழுதுமே அதிக லாபத்தை ஈட்டும் நிர்வாகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த ஐசிசி தொடரின் மூலம் பிசிசிஐ எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான அறிக்கையின் படி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரின் மூலம் பிசிஐக்கு மட்டும் 11,637 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த அறிக்கையின் படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “மேஜர் மிஸ்ஸிங்” சென்னை அணியின் வித்தியாசமான பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள் – என்ன நடந்தது?

கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே என நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -