எப்படியாவது கப் வாங்கியே தீரனும்! டி20 உலககோப்பைக்கு தயாராக பிசிசிஐ போடும் சூப்பர் பிளான் – என்ன தெரியுமா?

BCCI
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கு பெரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இந்த தொடரின் எஞ்சிய 2 போட்டிகள் வரும் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியை பெற்று ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெறுவதற்காக இரு அணி வீரர்களும் லக்னோ நகரில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 2 முக்கிய அணிகள் மோதும் இந்த தொடரை பார்ப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

டி20 உலகக்கோப்பைக்காக:
இந்த தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. அதன் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ள இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

indvswi

மறுபுறம் ஐசிசி டி20 தர வரிசையில் 9வது இடத்தில் தள்ளாடும் இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அந்த வேளையில் வலுவான இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு அந்த அணி தன்னால் முடிந்த அளவுக்கு போராட உள்ளது.

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடருக்கு தயாராகும் வண்ணமாகவே இது போன்ற டி20 தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. அந்த உலகக்கோப்பைக்கு முன்பாக தகுதியான வீரர்களை கண்டறிந்து தரமான இந்திய அணியை உருவாக்கும் முக்கிய பொறுப்பு தலைமைப் பொறுப்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

crick-BCCI

3 புதிய தொடர்கள்:
அந்த வேளையில் அவர்களுக்கு உதவி அளித்து தரமான இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது நடைபெறும் இலங்கை தொடருக்கு அடுத்ததாக ஒரு சில புதிய டி20 தொடர்களில் விளையாடுவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு அந்த அணிக்கு எதிராக கடந்த வருடம் ரத்து செய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் பங்கேற்க உள்ளது. அத்துடன் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணைப்படி இங்கிலாந்து தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணியினர் நாடு திரும்புவதாக இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின் படி இங்கிலாந்து தொடரை முடித்துக்கொண்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் அயர்லாந்துக்கு செல்லும் இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.

T20 wc

அதை முடித்து விட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கும் இந்திய அணியினர் அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு புதிய டி20 தொடரில் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முடித்துக்கொண்டு துபாய்க்கு பறக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அங்கு நடைபெற உள்ள ஆசிய கோப்பை 2022 தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் இந்த வருடம் துபாயில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை 20 ஓவர் தொடராக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படியாவது கப் வாங்கணும்:
இவை அனைத்துக்கும் முன்பாக வரும் ஏப்ரல் மே மாதம் வழக்கம்போல இந்திய வீரர்கள் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்க உள்ளார்கள். அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 9 முதல் 19 வரை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் இந்திய விளையாட உள்ளது. மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பையை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புதிய தொடர்களுக்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

2007 t20 worldcup

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா அதன்பின் கடந்த 15 வருடங்களாக அந்த உலக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அதைவிட கடந்த 2013ஆம் ஆண்டு கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி அதன்பின் கடந்த 9 வருடங்களாக ஒரு ஐசிசி உலக கோப்பை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. எனவே டி20 உலககோப்பை 2022 தொடரை எப்படியாவது வென்று இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்திலேயே இந்த அடுத்தடுத்த டி20 தொடர்களுக்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Advertisement