தோனி ஓகே சொல்றாரோ ? இல்லையோ ? கட்டாயம் இது நடக்கும். பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Dhoni
- Advertisement -

இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகளிலும், 91 டெஸ்ட் போட்டிகளிலும் 98 டி20 போட்டிகளிலும் கடந்த 16 வருடங்களாக விளையாடியிருக்கிறார் தோனி. 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்கள்ம் 33 அரை சதமும் 6 சதம் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்து இருக்கிறார். அதேபோன்று 350 ஒருநாள் போட்டிகளில் 10,763 ரன்களும் 73 அரை சதமும் , 6 சதம் அடித்திருக்கிறார்.

7

- Advertisement -

டி20 போட்டிகளில் 1617 ரன்கள் விளாசி இருக்கிறார். அதனை தாண்டி ஒரு கேப்டனாக 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அனைத்தையும் வென்றிருக்கிறார் .இந்த மூன்று ஐசிசி கோப்பையை வென்ற ஒரே வீரர் இவர் தான்.

இப்படி பல சாதனைகளை படைத்து விட்டு திடீரென எந்த ஒரு பிரம்மாண்டம் இல்லாமல் எளிமையாக தனது ஓய்வை அறிவித்துவிட்டு சர்வதேச கிரிக்கட் அரங்கிலிருந்து வெளியேறி விட்டார். ஆனால் இத்தனை சாதனைகள் படைத்த தோனிக்கு ஒரு மிகப் பெரிய விழா எடுக்க வேண்டும் அதற்காக ஒரு கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

Dhoni-1

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகமும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மகத்தான வீரருக்கு சிறப்பான வகையில் ஒரு வழியனுப்பும் போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின்படி :
.
அவருக்கு ஒரு மிகப்பெரிய பிரியாவிடை போட்டியை நடத்தி விட வேண்டுமென்று தான் நாங்கள் யோசித்து வருகிறோம். ஆனால் தற்போது எந்த ஒரு சர்வதேச தொடரும் கிடையாது. 2020 ஆம் ஆண்டு முடிந்த பின்னர் இது குறித்து யோசித்து நல்ல முடிவை எடுப்போம். அவருக்கு எப்போதும் ஒரு இறுதிப் போட்டியை நடத்தி விட வேண்டுமென்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni

நாட்டுக்காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு மகத்தான வீரருக்கு நாங்கள் மரியாதையை செய்ய விரும்புகிறோம். அதன்படி அவருக்கு ஏற்பாடு செய்யப்படும் வழியனுப்பும் போட்டியை ஏற்கிறாரோ இல்லையோ ? ஆனால் நிச்சயம் தோனியை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி பி.சி.சி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement