பி.சி.சி.ஐ சார்பில் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி – ரசிகர்கள் ஹேப்பி

sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி தற்போது பல திட்டங்களை கையாண்டு இந்திய அணியை பலப்படுத்தி வரும் கங்குலி பயிற்சியாளர் மாற்றம் கேப்டன் மாற்றம் என்ற பல விடயங்களை செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று அவர் எதிர்பார்த்த வேளையில் அந்த தொடரையும் இழந்து உள்ளதால் பெரிதளவு ஏமாற்றத்தை சந்தித்தார்.

IND

- Advertisement -

ஆனாலும் அடுத்த 18 மாதங்களில் நடைபெற இருக்கும் இரண்டு உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் பிசிசிஐ மும்மரமாக இருப்பதாக தெரிகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வேளையில் கூட இந்திய அணியின் முன்னேற்றத்தை மட்டுமே பார்த்து தற்போது கவனித்து வருகிறார்.

அந்த வகையில் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகவும், லட்சுமணன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், கங்குலி பிசிசிஐயின் தலைவராக இருக்கும் வேளையில் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் புதிய பதவி வழங்கி அவரின் அனுபவத்தையும் சரியான முறையில் பயன்படுத்த கங்குலி முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகிள்ளது. அதன்படி அவர் கூறுகையில் :

Laxman

சச்சின் தனது பங்களிப்பை எவ்வாறு இந்திய அணிக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து நீண்ட யோசனைக்குப் பிறகு முடிவு எடுத்துள்ளேன். விரைவில் சச்சினும் இந்திய அணிக்காக தனது பங்கை அளித்து நிச்சயம் முன்னேற்றத்திற்கு உதவுவார். அந்த வகையில் விரைவில் சச்சினின் நியமனத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று கங்குலி கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சச்சின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இதுதான் அவருக்கு கடைசி சேன்ஸ். இதுல அவர் நிரூபிச்சே ஆகனும் – இந்திய வீரரை எச்சரித்த டேனிஷ் கனேரியா

ஏனெனில் அவர்கள் விளையாடிய காலத்தில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமனண் என சிறப்பான ஜாம்பவான் வீரர்களாக பார்க்கப்பட்ட இவர்கள் தற்போது நிர்வாகத்திலும் கைகோர்த்தால் நிச்சயம் இந்திய அணி பெரிய அளவில் மாற்றம் அடையும் என்பதால் இந்தச் செய்தி தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement