மும்பையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று. இடம் மாறும் ஐ.பி.எல் மைதானம் – விவரம் இதோ

ipl
- Advertisement -

14வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரானது இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய 6 நகரங்களில் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ipl trophy

- Advertisement -

ஏனெனில் தற்போது தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் பயிற்சி பெற்று வரும் டெல்லி அணியின் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா உறுதியானது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் தேவ்தட் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அவர்களுக்குள் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள், நிர்வாகிகள் என அனைவருக்குமான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணி வீரர்கள் தற்போது சென்னையில் தங்கி இருக்கின்றனர். அதேபோல டெல்லி அணி வீரர்கள் மும்பையில் தங்கி இருக்கின்றனர்.

இந்த தொடரில் பங்குபெறும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அம்பயர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் தொற்று தொடர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி மும்பை மைதான பணியாளர்களில் 10 பேருக்கும், போட்டி மேலாளர்கள் ஆறு பேருக்கும் தொற்று உறுதியாக இருந்தது. மும்பையில் தற்போது தீவிரமாக பரவி வருவதால் அங்கு முழுநேர ஊரடங்கும் வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகும் வேளையில் மும்பையில் போட்டிகள் நடத்தப்படுவது சந்தேகம் என்றும் அந்த போட்டிகள் ஹைதராபாத் அல்லது இந்தூரிற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement