- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடருக்கு இணையாக அடுத்த ஆண்டு வரவுள்ள புதிய தொடர் – பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் உலகெங்கிலும் இருந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற விளையாடி இருந்தனர். பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த இந்த தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய லெஜென்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

ஓய்வு பெற்ற இந்திய வீரர்களின் இந்த சிறப்பான செயல்பாடு ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமாக அமைந்திருந்தது. இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர்கள் விளையாடும் புதிய ஐபிஎல் தொடர் ஒன்றினை உருவாக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்த விவரம் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே ஒரு தொடரை உருவாக்கி விளையாட விரும்புவதாகவுக்கும் அது குறித்து பிசிசிஐ-யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வருங்காலத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் விவாதித்து வருகிறது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் :

- Advertisement -

முன்னாள் வீரர்கள் வைத்துள்ள இந்த கோரிக்கை தற்போது முன்மொழிவு கூட்டத்தில் உள்ளது. இந்த வருடம் உடனே அந்த தொடரை திட்டமிட்டு நடத்த வாய்ப்பு இல்லை என்றாலும் அடுத்த வருடம் நிச்சயம் அந்த தொடரை நடத்துவதற்காக பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : தோனி ஓய்வுபெற்ற அன்றே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவிக்க என்ன காரணம் தெரியுமா? – சுவாரசிய தகவல் இதோ

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமலும், வாய்ப்பு கிடைக்காமலும் இருக்கும் இந்திய வீரர்களும் இந்த லீக் தொடரில் இடம் பிடித்து விளையாட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -