வீரர்களும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய அணி வீரர்களுக்கு நல்ல செய்தி சொன்ன – பி.சி.சி.ஐ

crick-BCCI
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

IND-3

- Advertisement -

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் முற்றிலுமாக விளையாட்டுப்போட்டிகள் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகப்பெரிய அளவில் இந்த பாதிப்பினால் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்க இருக்கிறது.

இதனால் மூன்று மாதத்திற்கான வீரர்களின் ஊதியத்தை குறைக்க அனைத்து நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பிசிசிஐ இந்திய அணியின் ஒப்பந்த வீரர்களுக்கு ஊதியத்தை குறைக்கும் எண்ணம் இல்லை என்று பெயர் தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பி.சி.சி.ஐ க்கு எந்தவிதமான முடிவு அரசாங்கமிடம் இருந்து வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. சூழலுக்கு ஏற்றார்போல் போட்டிகளை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மற்றபடி வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலில் எந்த தொகையும் பிடிக்கப்படாமல் காலாண்டு தொகையை அவர்களுக்கு நாங்கள் முறைப்படி வழங்குவோம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

ஏற்கனவே பல நாடுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை குறைக்கும் யோசனையில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போது தற்போது பிசிசிஐ அந்த முடிவை கைவிட்டது ஏனெனில் வீரர்கள் மீது இதில் எந்த தவறும் இல்லை. சூழ்நிலை இவ்வாறு அமைந்தால் வீரர்கள் என்ன செய்ய முடியும். இதற்காக அவர்களுக்கு முழு சம்பளத்தையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தானாக முன்வந்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

ind 3

அதேபோன்று இந்திய அணி வீரர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு நிதி வருகை தந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரே ஒரு அணி மட்டும் அதாவது பங்களாதேஷ் அணி வீரர்கள் மட்டும் தானாக முன்வந்து தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதியுதவியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement