விராட் கோலி மீது கைவைத்த பிசிசிஐ. இலங்கை தொடரில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

SKY

- Advertisement -

அதை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய நாட்களில் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டி-20 தொடரும் ஒருநாள் தொடர் போலவே ரசிகர்களின் அனுமதி இன்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இலங்கை தொடர்:
வரும் பிப்ரவரி 20ஆம் தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அண்டை நாடான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதாக இருந்தது.

INDvsSL

ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருந்த டெஸ்ட் தொடரை கடைசியாக நடத்த வேண்டுமென கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ முதலில் டி20 தொடரையும் அதன்பின் டெஸ்ட் தொடரையும் நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக பிரபல “க்ரிக்பஸ்” இணையத்தில் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

100வது டெஸ்ட்:
அதன்படி கடைசியாக நடைபெற இருந்த டி20 தொடர் முதலில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி லக்னோவில் துவங்க உள்ளது. அதன்பின் பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அழகான தர்மசலா மைதானத்தில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் வரும் மார்ச் 3ஆம் தேதியும் 2வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cricket – England v India – Second Test – Lord’s, London, Britain – August 11, 2018 India’s Virat Kohli during the match Action Images via Reuters/Paul Childs

இந்த மாற்று அறிவிப்பால் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை தனது 2வது வீடாக கருதும் பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையின்படி தனது 100ஆவது போட்டியை பெங்களூருவில் விளையாட இருந்தார்.

- Advertisement -

பிசிசிஐக்கு வன்மமா:
ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியை பெங்களூரு ரசிகர்கள் தங்களில் ஒருவராக கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட பாசம் நிறைந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் 100வது போட்டியில் விளையாட விராட் கோலி முடிவெடுத்திருந்தார். ஆனால் அவரை பெங்களூருவில் விளையாட முடியாத நிலைமைக்கு பிசிசிஐ உள்ளாக்கியுள்ளது. இது 100% வேண்டுமென்று நிகழ்த்தப்பட்டதா அல்லது எதர்ச்சையாக நடந்ததா என்பது தெரியாது.

RCB

ஆனால் இதிலிருந்து விராட் கோலி மீது பிசிசிஐக்கு லேசான வன்மம் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட விருப்பம் உள்ளதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். இருப்பினும் உலக கோப்பையை வாங்கித் தரவில்லை என்ற காரணத்தால் அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியது.

பிசிசிஐ – விராட் கோலி சண்டை:
அப்போது “டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம்” என விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார். அதுபற்றி விராட் கோலியிடம் கேட்டபோது “தன்னை யாரும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம்” எனக் கேட்டுக் கொள்ளவில்லை என உண்மையை உடைத்து பேசினார். பின்னர் அதுபற்றி சௌரவ் கங்குலியிடம் கேட்டபோது “இதுபற்றி கூறுவதற்கு கருத்து எதுவும் இல்லை, நேரம் வரும்போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும்” என கூறியிருந்தார். அதிலிருந்து பிசிசிஐக்கும் – விராட் கோலிக்கும் இடையே சண்டை இருந்தது உலகிற்கு அம்பலமானது.

Ganguly

அப்படிப்பட்ட இந்த வேளையில் விராட் கோலியை பெங்களூருவில் தனது 100வது போட்டியில் விளையாட விடாமல் பிசிசிஐ செய்துள்ளதை ஆழமாக யோசித்து பார்த்தால் “நேரம் வரும்போது விராட் கோலியை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும்” என சௌரவ் கங்குலி கூறியதை தற்போது செய்து காட்டிவிட்டதா என யோசிக்க வைக்கிறது.

Advertisement