- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடர் நடைபெற இருப்பது குறித்து 7 முக்கிய ஆலோசனைகள் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது என பிசிசிஐ நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் அந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கியமான ஏழு முக்கிய யோசனைகளை தற்போது பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அதன்படி 6 முதல் 7 யோசனைகள் வரை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஐபிஎல் நிர்வாகம் பிசிசிஐ மற்றும் ஓனர்கள் இடையே சுமூகமாக நடத்தப்பட்டதாகவும் இதில் போட்டியை குறைப்பதும் யோசனையாக அமைந்தன என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு இரண்டு பேர் பலியாகி உள்ளதாகவும் மேலும் 80 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டுக்கு மாற்றுவது பற்றி விவாதிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பேசிய பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறும்போது : பிசிசிஐ, ஐபிஎல் அதிகாரபூர்வ ஒளிபரப்பான ஸ்டார்ஸ்போர்ட்ஸ் ஆகியவை பண நஷ்டம் குறித்து நிச்சயமாக யோசிக்கவில்லை. பாதுகாப்பு குறித்தே முக்கிய பரிசீலனை நடத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும் விவாதத்தின்போது மே 31ம் தேதி வரை தொடரை நீட்டிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது மேலும் ஜூன் முதல் வாரம் வரை தொடர் நீட்டிக்கப்பட்டால் அயல் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by