- Advertisement -
ஐ.பி.எல்

கிரிக்கெட் ஒளிபரப்பு ஏலம் இத்தனை ஆயிரம் கோடியா…! பாத்தா வாய் பிளப்பீங்க !

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெறுவதற்கான ஏலம் நேற்று ஆன்லைனில் தொடங்கியது.பல்வேறு முன்னனி சேனல்களின் கடும் போட்டியால் ஏலத்தொகை மளமளவென்று உயர்ந்தது. இதனை எதிர்பார்க்காத பிசிசிஐ சென்ற ஏலத்தொகையை விட அதிகளவு பணம் கிடைக்கும் என மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இந்த ஏப்ரல் முதல் அடுத்த 5ஆண்டுகள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப பிசிசிஐயிடமிருந்து ஒளிபரப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.ஏற்கனவே 2013இல் விடப்பட்ட ஏலத்தின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதால் இந்த ஏப்ரலில் புது ஒப்பந்தத்திற்கான ஏலம் ஆன்லைனில் தொடங்கியது.

- Advertisement -

இதற்கு முன்னதாக 2013ம் ஆண்டு ஏலத்தில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 3851 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று தொடங்கிய ஆன்லைன் ஏலத்தில் முன்னனி சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன.

கடும் போட்டிகளுக்கிடையே முதல் நாள் ஏலம் கேட்கும் நேரம் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் தொடர்கின்றது.நேற்றை நாள் முடிவின் போது ரூபாய் 4442 கோடி வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இது சென்ற முறை ஏலம் போன தொகையை விட அதிகம்.இதனால் இந்தமுறை பிசிசிஐ மகிழ்ச்சியில் உள்ளது.கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் ஆன்லைனில் ஏலமிடப்படுவது இதுவே முதல்முறையும் கூட.

வரும் ஐந்தாண்டு அட்டவனைகளின் படி இந்தியாவில் ஒருநாள், டெஸ்ட், டி20 உள்ளிட்ட 102 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.இரண்டாம் நாள் ஏலத்தில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் பெறும் ஏலத்தொகை 5000 கோடி ரூபாயை தாண்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

- Advertisement -