- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மாவுக்கு அடுத்து புதிய கேப்டன் சுப்மன் கில் இல்லை.. நிர்வாகம் எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ

எதிர்வரும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளில் எந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணி மற்றும் தங்களது முழுமையான அணியை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் :

ஒரு சில காரணங்களால் பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணியானது துபாய் மைதானத்தில் மட்டுமே அனைத்து போட்டியிலும் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

அதேபோன்று அந்த அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் என பலரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரே அடுத்த கேப்டனாக வருவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.

இதன் காரணமாக ரோகித் சர்மா ஒருநாள் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக சுப்மன் கில்லே புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஹார்டிக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கம்பீர் விரும்பியதாகவும் அதனை தேர்வுக்குழு தலைவர் அகார்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை மட்டும் இந்திய அணி வெல்லவில்லை என்றால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதிவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : முகமது சிராஜை விட ஹர்ஷித் ராணா இந்த விடயத்தில் பெஸ்ட்.. அவரை யூஸ் பண்ணுங்க – பார்த்திவ் படேல் கருத்து

இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்த வேளையில் அவரைத் தாண்டி தற்போது ஹார்திக் பாண்டியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -