ஒருவேளை ரோஹித் சர்மா ஒருநாள் தொடரை தவறவிட்டால் இவர்தான் கேப்டனாம் – பி.சி.சி.ஐ போட்டுள்ள பிளான்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் மும்பையில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரை தவிர விட்டுள்ளார். தற்போது பெங்களூருவில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு வரும் ரோஹித் இன்னும் ஒரு வாரத்தில் காயம் குணமடைந்து இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஒருவேளை அவருக்கு காயம் முழுவதுமாக குணமடையாமல் ரோகித் சர்மா இந்த ஒருநாள் தொடரையும் தவறும்பட்சத்தில் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதன்படி ரோகித் சர்மா ஒருவேளை உடற்தகுதி பெறாமல் இந்த தொடரை அவர் தவறவிடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இளம் வீரரான கே.எல் ராகுலுக்கு இந்த ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவி வழங்கப்படும் என்று பிசிசிஐ சார்பில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட கே.எல் ராகுல் ஒருநாள் தொடரிலும் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாம் நாள் ஆட்டம் ரத்தானதால் அடுத்த 2 நாட்களுக்கு போட்டியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – விவரம் இதோ

தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி வரும் ராகுல் 122 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement