இரண்டாம் நாள் ஆட்டம் ரத்தானதால் அடுத்த 2 நாட்களுக்கு போட்டியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – விவரம் இதோ

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது செஞ்சூரியன் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியாக நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

rahul 1

அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

- Advertisement -

எனவே இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் இந்திய அணி ரன்களை குவித்து பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் மைதானத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி தொலைக்காட்சியில் பார்க்க காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் அது ஏமாற்றத்தை தந்தது.

mazhai

இன்றைய நாள் முழுவதுமாக மழை பெய்ததால் ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு கிடைக்காமல் இரண்டாம் நாள் ஆட்டமானது முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு போட்டியில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் யாதெனில் இன்றைய போட்டி முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் 90 ஓவர்கள் முழுவதுமாக வீணானது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவருக்கும் கேப்டன்சியில ஒரே இலக்கு தான் – ரவி சாஸ்திரி பேட்டி

அதனை ஈடுகட்டும் வகையில் மூன்றாவது மற்றும் நான்காவது நாள் ஆகிய ஆட்டங்களில் வழக்கமாக வீசப்படும் 90 ஓவர்களுடன் சேர்த்து இரண்டு நாட்களுக்கு 8 ஓவர்கள் கூடுதலாக 98 ஓவர்கள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போட்டி துவங்கும் நேரத்தை விட முன்கூட்டியே அரைமணி நேரம் முன்னதாக போட்டி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement