ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் முப்படை தளபதிகளுக்கு கிடைக்கவுள்ள கவுரவம் – பி.சி.சி.ஐ செய்துள்ள ஏற்பாடு

IPL and BCCI
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இந்த 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகளில் விளையாட குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

முப்படை தளபதிகளை கவுரவிக்க காத்திருக்கும் பி.சி.சி.ஐ :

இந்த பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அதேபோன்று இந்த ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இந்திய முப்படை தளபதிகளை கௌரவிக்க சிறப்பு ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிசிசிஐ சார்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது :

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்றதற்காக இந்திய ராணுவத்தை கொண்டாடும் வகையில் ஆயுதப்படையின் தளபதிகள் மற்றும் முக்கிய ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என அனைவருக்கும் அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்க தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நம் நாட்டின் ராணுவ வீரர்களின் வீரம், தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில் பிசிசிஐ அவர்களது செயலுக்கு சல்யூட் செய்கிறது. அதோடு ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவின் போது முப்படை தளபதிகளையும் அழைத்து ரசிகர்களுக்கு முன்னர் அவர்களுக்கு கவுரவ விருதையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : விக்கெட் எடுத்த பின்னர் “நோட் புக்” செலிப்ரேஷனில் ஈடுபடுவது ஏன்? – திக்வேஷ் ரதி பேட்டி

நம் நாட்டில் அதிகமாக கிரிக்கெட் நேசிக்கப்பட்டாலும் நமது பாதுகாப்பை விட எந்த ஒரு விஷயமும் பெரிதல்ல. எனவே இந்திய நாட்டிற்காக அயராது உழைக்கும் ராணுவ வீரர்களின் சேவையை பாராட்டி இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படி ராணுவ வீரர்களின் செயலை பாராட்டி அவர்களை கௌரவிக்க பிசிசிஐ எடுத்துள்ள இந்த நடவடிக்கை அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Advertisement