இந்தியாவில் தற்போது பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடர் எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த தொடரின் மிக முக்கியமான பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெற இருக்கின்றன.
“நோட் புக்” செலிப்ரேஷனில் ஈடுபடுவது ஏன்? : திக்வேஷ் ரதி பதில்
இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளிலும் இளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என பலரும் அறிமுகமாகி தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தனர். அந்தவகையில் இந்த ஆண்டு லக்னோ அணிக்காக அறிமுகமாகி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய திக்வேஷ் ரதியும் பெரியளவில் கவனத்தை ஈர்க்கும் வீரராகவே திகழ்ந்தார்.
அதோடு சிறப்பான பந்துவீச்சு மட்டும் இன்றி இவரது ஆக்ரோஷமான விக்கெட் செலிப்ரேஷன் அவருக்கு அபராதத்தை பெற்றுத்தந்ததோடு பலரது பார்வையையும் ஈர்க்க காரணமாக அமைந்தது. அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் தான் எப்போதெல்லாம் விக்கெட் எடுக்கிறாரோ அப்போதெல்லாம் நோட்புக் செலிப்ரேஷனில் ஈடுபட்டுள்ளார்.
அப்படி அவர் ஆக்ரோஷமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்றதோடு மட்டுமின்றி சமீபத்தில் ஒரு போட்டியில் விளையாடவும் அவர் ஐபிஎல் நிர்வாகத்தால் தடை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த விக்கெட் செலிப்ரேஷன் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதினால் அதனை தவிர்க்கும் படியும் பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திக்வேஷ் ரதி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து இருந்தார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் இப்படி “நோட் புக்” செலிப்ரேஷனில் ஈடுபடுவது எப்போதிலிருந்து உங்களது பழக்கத்திற்கு வந்தது? என கேள்வி எழுப்பினார். ரசிகரின் அந்த கேள்விக்கு திக்வேஷ் ரதி பதில் கூறுகையில் : நான் எப்பொழுதெல்லாம் ஒரு தொடருக்கு விளையாட செல்கிறேனோ அப்போதெல்லாம் கையுடனே ஒரு நோட் புக்கை எடுத்துச் செல்வேன்.
இதையும் படிங்க : இந்தியா பாதுகாக்க.. சுப்மன் கில் கரெக்ட்டான சாய்ஸ்.. ஆனா வெற்றிக்கு இந்த வாய்ப்பை கொடுங்க.. ஸ்டீவ் வாக்
அப்படி கொண்டு செல்லும் நோட் புக்கில் அங்கு விளையாடும் அனைத்து வீரர்களின் பெயர்களையும் எழுதுவது என் வழக்கம். அந்த வகையிலேயே தற்போது ஐபிஎல் தொடரிலும் நான் விக்கெட் வீழ்த்தும் போது அவர்களது பெயரை எழுதுவது போல இந்த நோட் புக் செலிப்ரேஷனில் ஈடுபடுகிறேன் என திக்வேஷ் ரதி கூறியது குறிப்பிடத்தக்கது.



