அடுத்தது தள்ளிப்போன இரண்டு மிகப்பெரிய போட்டிகள். சிக்கலில் கங்குலி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டிற்கான பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளை இரு அணிகளாகப் பிரிந்து ஐபிஎல் தொடருக்கு முன் ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பிசிசிஐ அதிகாரிகள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு போட்டிக்கான தேதி மற்றும் இடம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

ஆனால் தற்போது திட்டமிட்டபடி அந்த நாளில் ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியாது என்று தெரியவந்துள்ளது. எனவே அந்த போட்டியினை தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டும் வகையில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் மோதிரா மைதானத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் மேலும் அந்த போட்டிக்கான நாள் மற்றும் மைதானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கங்குலி அறிவித்துள்ளார்.

அதற்கு காரணமாக போட்டியை நடத்துவதற்கான டெண்டர்கள் பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிய மற்றும் உலக லெவன் போட்டிகள் ஆகியவை பிசிசிஐ – யால் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆல் ஸ்டார்ஸ் போட்டியும் தள்ளிப்போய் இருப்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ipl

மேலும் இதுகுறித்து கங்குலியின் தரப்பில் கூறப்பட்டுள்ள தகவல் சிலபல இடையூறுகளால் போட்டி தள்ளிப் போனாலும் நிச்சயம் ஐபிஎல் தொடர் முடிந்து இந்த போட்டி நடத்தப்படும் இதற்கான ஆயத்த பணிகளை பிசிசிஐ மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு பெரிய போட்டிகளை பிசிசிஐ தவறவிட்டு உள்ளதால் பிசிசிஐ வட்டாரத்திலும் இந்த நிகழ்வு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement