- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவை கேப்டனாக்க தயங்கும் பி.சி.சி.ஐ.. அதற்கான முக்கிய 2 காரணங்கள் இதுதான் – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் களத்தில் பலம் வாய்ந்த அணிகளில் முக்கிய அணியாக பார்க்கப்படும் இந்திய அணிக்கு கடந்த ஓராண்டாகவே மோசமான காலகட்டம் நிலவி வருகிறது என்று கூறலாம். ஏனெனில் டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியானது அதற்கடுத்து மோசமான சரிவை கண்டுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கெதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்த தோல்வியை சந்தித்தது.

பும்ராவை கேப்டனாக்க தயங்கும் பி.சி.சி.ஐ :

இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டுள்ளதால் அடுத்ததாக நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியாக வேண்டிய முனைப்புடன் தற்போது தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் 37 வயதான ரோஹித் சர்மா எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தான் இந்திய அணியின் கேப்டனாக நீடிப்பார் என்றும் அதன்பிறகு அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும் அவரை கேப்டனாக நியமிக்க நிர்வாகம் தயங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் :

- Advertisement -

பும்ரா வேகப்பந்து வீச்சாளர் என்பதனால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதே போன்று மற்றொரு விடயம் யாதெனில் : அவர் காயத்தால் அடிக்கடி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாலும் அவரை நிரந்தர கேப்டனாக மாற்றினால் அடிக்கடி அவருக்கு பதிலாக மாற்று கேப்டனை தேட வேண்டிய அவசியம் ஏற்படும்.

இதையும் படிங்க : 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பும் அதிர்ஷ்டம்.. கட்டாயத்தில் நிர்வாகம் – கருண் நாயருக்கு லக்

அதோடு வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு கேப்டன் பொறுப்பு கூடுதல் சுமையை அளிக்கும் என்பதனாலும் அவரை கேப்டனாக மாற்ற பி.சி.சி.ஐ தயங்குகிறது. இதன் காரணமாக நிச்சயம் பேட்மேன்களில் ஒருவர்தான் அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் கேப்டன்சி போட்டிக்கான வரிசையில் இருந்தாலும் அவர்களை தாண்டி யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை கேப்டனாக நியமிக்க கௌதம் கம்பீர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -