எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரை நடத்த சாத்தியம் உள்ள 3 நாடுகள் – பி.சி.சி.ஐ எடுக்கப்போகும் முடிவு என்ன ?

IPL-1
- Advertisement -

இந்தியாவில் கொரானாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், தினம்தோறும் இலட்சக்கனக்கான மக்கள் தொற்றிற்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பும் ஆயிரக் கணக்கில் பதிவாகி வருகிறது. மக்கள் இப்படி தினம்தோறும் கஷ்டத்திற்கு ஆளாகி வந்த சூழ்நிலையில், ஐபிஎல் தொடரானது அவர்களின் மனதில் இருக்கும் அழுத்தத்தை கொஞ்சமாவது குறைக்கும் என்று நினைத்து, பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தியாவிலேயே ஐபிஎல் தொடரை ஆரம்பித்த பிசிசிஐ, தொடரில் விளையாடும் வீரர்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பயோ பபுள் என்ற விதிமுறையையும் ஏற்படுத்தியது.

KKRvsRCB

- Advertisement -

இந்த விதிமுறையின் கீழ் இருக்கும் எந்த ஒரு வீரரும் பயோ பபுளைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது. ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கும், மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கும் செல்வதற்கு மட்டுமே வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த விதிமுறையை வீரர்கள் கடுமையாக பின்பற்றியபோதும், தொடரில் பங்கேற்றிருந்த சில வீரர்களுக்கும், அணி நிர்வாக ஊழியர்களுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது. எனவே வீரர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பாத பிசிசிஐ, நடப்பு ஐபிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக கடந்த 4ஆம் தேதி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஐபிஎல்லில் பங்கேற்றிருந்த அனைத்து வீர்ர்களையும் பத்திரமாக அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்த பிசிசிஐ, இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியிருக்கும் 31 போட்டிகளை செப்டம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில் நடத்த முடியுமா என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. ஒருவேளை செப்டம்பர் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் எங்கு நடைபெறும் என்ற கேள்வி தற்போது எருந்துள்ளது.

RRvsSRH

இதற்கிடையில் நேற்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் நடத்த விரும்புவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாத தொடக்கம் வரை வரை இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது, அதற்கடுத்த மாதத்திலேயே டி20 உலகக் கோப்பையும் நடைபெற இருக்கிறது. எனவே மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த, செப்டம்பரில் கிடைக்கும் கால அளவு மிகக் குறைவாகவே உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் கவுண்ட்டி அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய அணியும் செப்டம்பர் மாதம் அங்கே இருக்கும் என்பதால் இங்கிலாந்திலேயே மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சிறந்த முடிவாக இருக்கும் என்று பலர் கருத்துகூறி வருகின்றனர். பல்வேறு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் இப்படி எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டி வரும் சமயத்தில், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஐக்கிய அமீரகத்திலேயே மீதமிருக்கும் போட்டிகளை நடத்த பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது.

Dubai

ஏனெனில் ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஆடுகளங்களுக்கு இடையேயான தொலைவு குறைவு என்பதால், ஒரு ஆடுகளத்தில் விளையாடி விட்டு தரைவழி போக்குவரத்தின் மூலமாகவே மற்றொரு ஆடுகளத்திற்கு அணிகளால் எளிதாக செல்ல முடியும். வான்வழி போக்குவரத்தை தவிர்த்து இப்படி செய்வதால் வீரர்களிடையே கொரானா பரவுவதை எளிதாக தடுக்க முடியும். இருந்தாலும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எங்கே நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ இன்னும் முடிவு செய்யவில்லை.

Advertisement