எந்த தடையும் இல்ல நீங்களும் இந்த ஐ.பி.எல் தொடரில் ஆடலாம் – க்ரீன் சிக்னல் காட்டிய பி.சி.சி.ஐ

BCCI
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் உடன் இந்த தொடரானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே இருக்கும் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட தற்போது புதிய இரு அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளும் தாங்கள் விருப்பப்பட்ட 3 வீரர்களை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியது.

IPL
IPL Cup

இந்நிலையில் இந்த தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணி சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களின் நிறுவனத்தின் பங்கு சூதாட்ட நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

இதனை அடுத்து விசாரணையை துவங்கிய பிசிசிஐ தற்போது முடிவான ஒரு விளக்கத்தை வெளியிட்டு அதில் அகமதாபாத் அணிக்கும் சூதாட்ட நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அப்படி தொடர்பில் இருப்பது தெரிந்தால் அந்த அணிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ipl-2020

இதனால் தற்போது அகமதாபாத் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. மேலும் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்கள் அணியில் தேர்ந்தெடுக்க உள்ள மூன்று வீரர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி சொன்ன இந்த வார்த்தைகள் தான் என்னை காப்பாற்றியது. தல தலதான் – மனம்திறந்த அஷ்வின்

அடுத்த ஐ.பி.ல் தொடரானாது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி துவங்கும் என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement