தோனி சொன்ன இந்த வார்த்தைகள் தான் என்னை காப்பாற்றியது. தல தலதான் – மனம்திறந்த அஷ்வின்

ashwin
Advertisement

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி ஹர்பஜன் சிங்கின் சாதனையையும் பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார். இப்படி ஒரு அருமையான ஆண்டினை சந்தித்த அஷ்வின் டி20 அணியிலும் திரும்பியிருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். இனிவரும் காலங்களிலும் அவர் நிச்சயம் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ashwin 1

இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு பயணத்துள்ள அஷ்வின் சமூக வலைதளம் மூலமாக தான் சந்தித்த தருணங்கள், கஷ்டப்பட்ட நாட்கள் என அனைத்து விவரங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியுடன் அவருக்கு இருந்த உறவு குறித்து பேசியுள்ளார். மேலும் தான் கஷ்டப்பட்ட காலங்களில் தோனி எவ்வாறு உதவினார் என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அஷ்வின் பேசுகையில் :

- Advertisement -

நான் எப்போதுமே சுய நம்பிக்கை கொண்ட ஒரு நபர்தான். இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகளால் எனது மனம் சற்று கலக்கம் அடையும். அப்போதெல்லாம் நான் தோனியிடம் சென்று சில அறிவுரைகளை கேட்பேன். அப்போது தோனி என்னிடம் தொடர்ந்து கூறுவது ஒன்றை மட்டும்தான். காயம் காரணமாக நீ விளையாடாமல் போனாலும் உன்னை நீ தயார் செய்து கொண்டே இரு அது மட்டும் தான் உன்னுடைய பணி என்று தோனி என்னிடம் கூறுவார்.

ashwin

அதுமட்டுமின்றி போட்டியின் முடிவை கண்டு எப்போதும் பயப்படக் கூடாது என்றும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்றும் கூறுவார். ஏனெனில் தோல்வியை கண்டு ஒதுங்கி இருப்பதை விட களத்தில் நின்று தோற்றாலும் பரவாயில்லை என்று கூறுவார். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்முடைய ப்ராஸசை மட்டும் கைவிடக்கூடாது என்றும் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்றும் எனக்கு அடிக்கடி அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து மீண்டும் தனது பழைய வேலைக்கு திரும்பும் ரவி சாஸ்திரி – குட் நியூஸ்

அவர் கூறிய சில அறிவுரைகள் தான் என்னை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டுவர உதவியது. என்னுடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் கரியரிலும் தோனியின் பங்கும் முக்கியமான ஒன்று என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement