வசமாக சிக்கிய கோலி, ரவி சாஸ்திரி. தோனி மற்றும் ராயுடு குறித்து கேள்விகளால் துளைக்க உள்ள – பி.சி.சி.ஐ

ravi-koli-3
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதியில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரிடமும் கேள்விக் கணைகளைத் தொடுக்க பிசிசிஐ தயாராக உள்ளதாக தெரிகிறது.

Kohli

- Advertisement -

தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணி விமான டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதிப்போட்டிக்கு பின்பு இந்தியா திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்தியா திரும்பிய பிறகு கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது பி.சி.சி.ஐ.

அதில் அணித்தேர்வில் நடந்த கிடுக்கிப்பிடி மற்றும் தோல்விக்கான காரணங்கள் போன்றவற்றை பிசிசிஐ கேட்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய தொடர் வரை ராயுடுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் திடீரென உலகக் கோப்பை தொடருக்கு முன் அவரை அணியில் இருந்து இந்திய அணி கழற்றிவிடப்பட்டு உலகக்கோப்பை தேர்வில் ராயுடுக்கு பதிலாக ஷங்கரை தேர்வு செய்தது.

Shankar

இந்த விரக்தி காரணமாக ராயுடு ஓய்வு அறிவித்தார். இந்நிலையில் முதல் கேள்வியாக ராயுடுவை ஏன் அணிக்கு தேர்ந்தெடுக்கவில்லை. அவ்வாறு அவர் பார்மில் இல்லை என்று உங்களுக்கு தெரிந்தால் ஏற்கனவே அவருடைய வாய்ப்பை விடுத்து வேறு ஒரு வீரரை நீங்கள் பரிசோதிக்கலாம். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என்பது போன்ற கேள்வியை முதலில் கேட்க பட உள்ளதாகவும் தெரிகிறது.

- Advertisement -

அதற்கடுத்து தோனியின் பேட்டிங் வரிசை குறித்த கேள்வியை கேட்க உள்ளனர். பொதுவாக இக்கட்டான சூழ்நிலையில் தோனியை முன்னரே அனுப்பி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து அணியை நிலைப்படுத்துவது தான் சரியான யோசனை ஆகும். ஆனால் இந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோனி 7 ஆவது வீரராக களம் இறங்கியதால் போட்டியில் அவரால் சரியாக ஆட முடியாமல் போனது.

Dhoni

தோனியின் இந்த மாற்றத்திற்கான காரணம் இரண்டாவது கேள்வியாக கேட்கப்பட உள்ளது. மேலும் நான்காவது இடத்தில் இந்த தொடர் முழுவதும் கடைசிவரை யார் இறங்குவார்கள் என்று கேள்வியே இருந்தது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னரே நான்காவது வீரர் பற்றிய முழு புரிதலுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வரவில்லை என்பது இதில் தெளிவாக தெரிகிறது. எனவே அந்தக் கேள்வியும் பிசிசிஐ அவர்களிடம் கேட்க உள்ளதாக பிசிசிஐயின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement