- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க இல்லனா இந்தளவுக்கு வளந்துருக்கவே மாட்டேன்.. பாகுபாடு இல்லாம சான்ஸ் தராங்க.. நடராஜன் பதில்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தியாவுக்காக விளையாடி தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்த்தவர். சேலம் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் கிரிக்கெட்டின் காதலால் உள்ளூரில் டென்னிஸ் பந்துகளில் விளையாடத் துவங்கினார். அதில் நன்றாக விளையாடியதால் டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்ற நடராஜன் அங்கேயும் சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தார்.

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமான அவர் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி பலரது பாராட்டுகளை பெற்றார். குறிப்பாக தமிழக ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டின் யார்க்கர் கிங் என்று பாராட்டினர். அதனால் 2020/21 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக நெட் பவுலராக செயல்படும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

- Advertisement -

நடராஜன் மறுப்பு:
அதிர்ஷ்டவசமாக சில முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு அந்த சுற்றுப்பயணத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திய நடராஜன் சிறப்பாக விளையாடி காபா போன்ற இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்த அவருக்கு இதுவரை 4 வருடங்களாகியும் மறுவாய்ப்பு கிடைக்காதது தான் தற்போது தமிழக ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் தொடரில் மீண்டும் நன்றாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆவேஷ் கான், கலீல் அஹ்மத், முகமது சிராஜ் ஆகியோரை விட ஐபிஎல் 2024 தொடரில் நடராஜன் குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அவர்களை 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவும் பிசிசிஐயும் நடராஜனை ரிசர்வ வீரராக கூட தேர்ந்தெடுக்கவில்லை.

- Advertisement -

அதனால் சாதி மற்றும் தமிழர் போன்றவற்றால் பாகுபாடு பார்த்து அவரை பிசிசிஐ தேர்ந்தெடுக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ தமக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது என நடராஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மதுரையில் பேசியது பின்வருமாறு. “வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருந்தால் உங்கள் முன் நான் நடராஜனாக வந்திருக்க முடியாது. இடையில் காயங்கள் சந்தித்ததால் இடைவெளியும் மேடு பள்ளங்களும் ஏற்பட்டது”

இதையும் படிங்க: கமின்ஸ், கபில் தேவை பாருங்க.. நானா கேட்க முடியுமா? இதனால தான் நாங்க ஒதுக்கப்படுறோம்.. பும்ரா ஆதங்கம்

“பிசிசிஐ எனக்கு போதுமான வாய்ப்புகளை அளித்து வருகிறது. என்னால் தான் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியவில்லை. உண்மையில் பிசிசிஐ எந்த வீரர்களிடமும் பாகுபாடு மற்றும் ஏற்ற தாழ்வுகளை பார்ப்பதில்லை. பிசிசிஐ கொடுத்த அரவணைப்பு மற்றும் ஒத்துழைப்பால் தான் நான் நடராஜனாக வளர்ந்துள்ளேன். அடுத்த வாய்ப்பு நேரம் வரும் போது நல்லபடியாக கிடைக்கும்” என்று கூறினார்.

- Advertisement -