சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு 50 கோடியினை வழங்கயிருக்கும் பி.சி.சி.ஐ – எதுக்கு தெரியுமா?

- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த மாபெரும் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையையும் ஐசிசி ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

Chepauk

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியதிலிருந்து தற்போது இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்த மாபெரும் உலகக் கோப்பை தொடர் தற்போது சமூகவலைதளத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, லக்னோ, புனே, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை என 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், கூடுதலாக சில வசதிகளையும் செய்வதற்காகவும் பிசிசிஐ தற்போது 500 கோடியை ஒதுக்கி உள்ளது.

Chepauk Chennai Cricket Stadium

அதன்படி ஒவ்வொரு மைதானத்திற்கும் 50 கோடி வீதம் வழங்கப்பட உள்ளதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும் 50 கோடி ரூபாய் கிடைக்க உள்ளது. அந்த தொகையை வைத்து சேப்பாக்கத்தில் உள்ள மின்விளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்படுவதோடு சேர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளமும் சற்று மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : Ashes 2023 : முட்டாள்தனத்தின் உச்சம், இங்கிலாந்தை மோசமாக விமர்சித்த மைக்கேல் வாகன், பீட்டர்சன் – காரணம் என்ன

அதோடு மைதானத்தின் மேற்கூரை, ரசிகர்கள் அமரும் இருக்கைகள் என அனைத்திலுமே தரத்தினை மேம்படுத்தி ஒரு சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. அந்த வகையிலேயே தற்போது பிசிசிஐ 50 கோடி ரூபாயை சேப்பாக்கம் மைதானத்திற்கு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement