Ashes 2023 : முட்டாள்தனத்தின் உச்சம், இங்கிலாந்தை மோசமாக விமர்சித்த மைக்கேல் வாகன், பீட்டர்சன் – காரணம் என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. குறிப்பாக அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்களை குவித்த ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்தும் வெற்றியை தீர்மானித்த எக்ஸ்ட்ரா 40 – 50 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் அந்த அணி கோட்டை விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இந்த அதிரடியை மூட்டை கட்டிவிட்டு வழக்கம் போல விளையாடுங்கள் என நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் இங்கிலாந்தை சரமாரியாக விமர்சித்தனர்.

மறுபுறம் தார் ரோட் பிட்ச்களில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிப் பெற்ற போலியான தன்னம்பிக்கையுடன் வலுவான ஆஸ்திரேலியாவை சாய்த்து விடலாம் என தப்பு கணக்கு போட்ட இங்கிலாந்தை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். ஆனால் ஒரு தோல்விக்காக அசரப் போவதில்லை என்று தெரிவித்த பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் இந்த தொடர் முழுவதும் இதே அதிரடி பாதையில் விளையாடுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

- Advertisement -

முட்டாள்தனத்தின் உச்சம்:
அந்த நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க டேவிட் வார்னர் 66, டிராவிஸ் ஹெட் 77 என இதர முக்கிய ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 48, பென் டூக்கெட் 98, ஓலி போப் என 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்ததால் ஒரு கட்டத்தில் 188/1 என்ற வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் அவர்களுக்குப் பின் ஜோ ரூட் 10, ஹரி ப்ரூக் 50, ஜானி பேர்ஸ்டோ 16, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 என முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் வலையில் சிக்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் கடைசி 7 விக்கெட்டுக்கு வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு சுருண்டது. மறுபுறம் மீண்டும் பந்து வீச்சில் மிரட்டி 89 ரன்கள் முன்னிலை பெற்று அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார்.

- Advertisement -

அப்படி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் சொதப்பும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து ரசிகர்களை பொழுதுபோக்கி மகிழ்விக்கிறோம் என்ற பெயரில் முட்டாள்தனமாக செயல்படுவதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் 182 ரன்களை இங்கிலாந்து பொழுதுபோக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக விளையாடிய எடுத்தது. ஏனெனில் அதில் நல்ல ஷாட்கள் இருந்தன. ஆனால் அந்த மணி நேரத்திற்கு பின் வெளிப்படுத்திய ஆட்டம் மிகவும் முட்டாள்தனமானது”

“என்னை மன்னிக்கவும். இது பொழுதுபோக்கு கிடையாது. நீங்கள் முட்டாள்தனமான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறீர்கள். குறிப்பாக ஜாக் கிராவ்லி சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்த பின் தன்னுடைய விக்கெட்டை எளிதாக பரிசளித்து தனது முன்னேறாத செயல்பாட்டை காட்டினார். மறுபுறம் ஸ்விங் ஆகாத இந்த சூழ்நிலைகளில் என்ன செய்து வெற்றி பெற வேண்டும் என்பதை ஆஸ்திரேலியா நன்றாக அறிந்துள்ளது”

இதையுஜ்ம் படிங்க:நாம தான் சஞ்சு சாம்சனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றோம் ஆனா அவர் அதுல நம்மல ஏமாத்திகிட்டே இருக்காரு – சபா கரீம் அதிருப்தி

“இந்த இங்கிலாந்து அணியில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதாவது அவர்கள் எப்போது நாம் போட்டியின் டாப்பில் இருக்கிறோம் என்பதை உணர்வதில்லை. குறிப்பாக வெளியே 2 ஃபீல்டர்கள் இருப்பதை தெரிந்தும் ஃபுல், ஹூக் ஷாட் அடித்து வேண்டுமென்றே ரிஸ்க் எடுத்து அவுட்டாகிறார்கள்” என்று கூறினார். இது போலவே கெவின் பீட்டர்சனும் பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement