இனிமே நீங்க பேச வேண்டாம் சஞ்சய் மஞ்சரேக்கரை வீட்டுக்கு அனுப்பிய கங்குலி – பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. அதன்பிறகு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெற இருந்த மீதமிருந்த இரண்டு போட்டிகளும் தற்போது ரத்து செய்யப்பட்டது.

Ground-Dharamsala

- Advertisement -

மேலும் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டிக்கான வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பெறவில்லை.

ஆனால் வர்ணனையாளர் குழுவில் சுனில் கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் பி.சி.சி.ஐ வர்ணனையாளர் குழுவில் இருந்து தற்போது அவரை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் ஏன் நீக்கப்பட்டார் என்ற காரணமும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

Sanjay

இருப்பினும் அவரது நடவடிக்கையில் அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது என்று மறைமுக தகவல் வெளியாகியுள்ளன. பி.சி.சி.ஐ வர்ணனை குழுவில் இருந்த மஞ்ச்ரேக்கர் நீக்கப்படுவதால் அவர் ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளராக தேர்வாக மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை விமர்சனங்களாக கொடுத்துவரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரசிகர்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்து இருந்தார்.

- Advertisement -

மேலும் ஒரு சார்பு நிலையில் பேசுவதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டியின்போது மும்பை அணிக்கு சப்போர்ட் செய்து பேசுவது, இந்திய அணி விளையாடும் போது ரவீந்திர ஜடேஜா குறிவைத்து தாக்கிப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேசமயம் உலக கோப்பை தொடரிலும் டோனியையும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sanjay

அதுமட்டுமின்றி தற்போது அண்மைக் காலத்தில் சக வர்ணனையாளர் ஆன ஹர்ஷா போக்லேவை மட்டம் தட்டி அவர் பேசியதால் ரசிகர்களின் எதிர்ப்பை அவர் பலமாக பெற்றார். எனவே இவரது இந்த நீக்கத்திற்கு பின்னணியில் ஜடேஜா, தோனி, போக்லே ஆகியோருக்கு எதிராக கூறிய கருத்துக்களே காரணம் என்றும், அதனாலேயே பிசிசிஐ அவரை நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement