யாரை கேட்டு வெளியபோய் ப்ராக்டீஸ் பண்றீங்க. இந்திய வீரரை எச்சரித்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மார்ச் மாதம் நடக்கவிருந்த தென்ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்துவிட்டு தற்போது வரை வீட்டிற்கு வெளியே வராமல் இருக்கின்றனர். மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் வேலைகள் செய்து கொண்டும், குடும்பத்தினருடனும் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக லாக் டவுனில் இருந்த இந்திய வீரர்களில் முதன் முதலாக ஒருவர் தனது பயிற்சியை துவக்கியுள்ளார்.

Ind

- Advertisement -

ஏற்கனவே இரண்டு மாதங்கள் முற்றிலும் வீணாகியுள்ள நிலையில் இன்னும் எத்தனை மாதங்கள் இந்த நிலைமை நீடிக்கும் என்றும் தெரியவில்லை. எனவே அடுத்து இந்திய அணி எந்த தொடரில் விளையாடும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் வீரர்கள் பயிற்சியினை மேற்கொள்ளகூட வழியின்றி வீட்டினுள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஷர்துள் தாக்கூர் தான் தனது பயிற்சியை துவக்கியுள்ளார். நான்காவது லாக் டவுனில் தனிப்பட்ட வீரர்கள் தங்களது தனிப்பட்ட பயிற்சியை துவக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பிசிசிஐ வீரர்களை தனித்தனியாக வைத்து பயிற்சி கொடுத்து வருகிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்த மாதம் சென்று டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக வீரர்களை தயார் செய்து வருகிறது.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் தங்களது பார்மை பிடிக்க அதிகம் பயிற்சி செய்த செய்ய வேண்டியிருக்கும். இதன்காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னரே பயிற்சி துவங்கப்பட்டு விட்டது. அதில் முதல் வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரதுல் தாக்கூர் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். அவர் மஹராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

- Advertisement -

தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் மும்பையில் இருக்கும் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் நகரின் நடுப்பகுதியில் இருப்பதால் அவர்கள் பயிற்சி செய்ய அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணியில் ஷர்துள் தாகூர் முதல் வீரராக பயிற்சியை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் மைதானங்களில் பயிற்சி பெற மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ‌ஷர்துல் தாகூர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் உள்ள அவர் கிரிக்கெட் வாரியத்திடம், எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது : ‘‘‌ஷர்துல் தாகூர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் வெளிபுறப் பயிற்சியில் ஈடுபட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒப்பந்த வீரர்களை நாங்கள் வெளிப்புற பயிற்சிக்கு அனுமதிக்கவில்லை. அவராகவே சென்று பயிற்சியில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது. இது நல்ல முடிவு அல்ல’’ என்றார்.

Advertisement