இந்தாண்டு டி20 உலகக்கோப்பை இந்த 9 மைதானங்களில் தான் நடைபெறும் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

BCCI
- Advertisement -

ஆண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளதாக ஐசிசி அறிவித்தது. இந்தியாவில் மொத்தமாக ஒன்பது இடங்களில் இந்த தொடரை நடத்த போவதாக பிசிசிஐ சார்பாக செய்திகளும் அண்மையில் வெளி வந்தன. தொடரின் லீக் ஆட்டங்கள் மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், தர்மசாலா, கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற ஊர்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த உள்ளதாகவும் பிசிசிஐ சமீபத்தில் கூறியது.

- Advertisement -

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு நாள் மட்டுமே 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மிக தீவிரமாக பரவி வரும் இந்த கொரோனா மிகப்பெரிய அச்சத்தை தற்பொழுது அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மருத்துவமனைகளில் படுக்கைகளும் ஆக்சிஜன் சிலிண்டர் களும் இல்லாமல் பல மக்கள் உயிர்களை பறிகொடுத்து வருகின்றனர்.

மறுபக்கம் தடுப்பூசி பற்றாக்குறையால் இந்திய அரசாங்கம் தத்தளித்து வருகிறது. பிசிசிஐ தற்பொழுது ஐபிஎல் தொடரை எவ்வாறு கையாளுகிறது என்பதை டீஸ் ஐசிசி கூர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கொரனோ அதிகமாக பரவி வருவதால் திட்டமிட்டபடி உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு உள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதை பற்றி கலந்து ஆலோசிக்கவும் மேலும் முழுமையாக இதைப் பற்றி முடிவெடுக்க ஐசிசியின் ஒரு குழு வருகிற 26-ஆம் தேதி இந்தியாவுக்கு வர இருக்கிறது. நேரில் வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, எல்லாம் சரியாக வந்தால் திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்த முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dubai

ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டால் தொடரை ஸ்ரீலங்கா அல்லது ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த போவதாகவும் அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement