2021 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் இந்த நாட்டில் தான் நடைபெறும் – பி.சி.சி.ஐ எடுத்த முடிவு

IPL
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 14வது சீசனுக்கான ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அப்போது இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வெகுசிறப்பாக பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு முடிவடைந்தது.

ipl trophy

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டாவது இந்தியாவில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போதும் இந்தியாவில் கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில் இந்தியாவில் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் இம்முறை சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற இருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல்முறையாக ஏலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

auction-1

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையின்படி பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் ஏலத்திற்கு பின்னர் ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும் என ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பேட்டியளித்துள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரின் மினி ஏலம் 18 ஆம் தேதி முடிவடைந்ததும் எந்த இடத்தில் எந்த நாட்டில் போட்டிகள் நடத்தப்படும் என்று ஆலோசிக்கப்படும்.

Dubai

இந்தியாவில் போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு காரணிகளை ஆராய வேண்டியிருக்கிறது. இம்முறையும் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு ஆப்ஷன் ஆக இருக்கும். ஆனால் முடிந்தவரை இந்த தொடரை இந்தியாவில் நடத்தவே நாங்கள் விரும்புகிறோம் மேலும் ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களும் அதையே விரும்புகிறார்கள் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement