- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்கள நம்ப முடியாது.. 40 வயசாயிடும்.. ரோஹித் சர்மா விடயத்தில் முக்கிய முடிவை எடுக்க – பி.சி.சி.ஐ திட்டம்

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அந்த கோப்பையை வென்ற கையோடு ரோகித் சர்மா டி20 வடிவ போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. இப்படி அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய ரோஹித் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரோஹித் சர்மா விடயத்தில் முக்கிய முடிவை எடுக்கப்போகும் பி.சி.சி.ஐ :

ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு தான் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரின் இடையே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனால் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா அதிகாரவப்பூர்வமாக வெளியேறியுள்ளார்.

- Advertisement -

அதேவேளையில் தொடர்ந்து 2027 உலக கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடி விட்டு அதன்பிறகு முழு ஓய்வை அறிவிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த பின்னர் சூர்யகுமார் யாதவ் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதேபோன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததும் தற்போது புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியை பொருத்தவரை மூன்று வடிவ போட்டிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது சரியாக இருக்காது என நிர்வாகம் நினைக்கிறது.

- Advertisement -

எனவே டி20 போட்டிகளை பொருத்தவரை சூரியகுமார் யாதவே கேப்டனாக தொடரட்டும் என்றும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில்லை கேப்டனாக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எனவே ரோகித் சர்மா விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில் மற்றும் பண்ட் ஆகியோருக்கு காத்திருக்கும் சவால்.. இங்கிலாந்து தொடருக்கு முன் எச்சரித்த – ஹர்பஜன் சிங்

ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் அடுத்த 2027 ஒருநாள் உலககோப்பை தொடருக்குள் 40 வயதை எட்டி விடுவார் என்பதால் அவரது உடற்பகுதி மற்றும் பேட்டிங் பார்ம் ஆகியவை எவ்வாறு இருக்கும் என்பதை உறுதியாக நம்மால் கணிக்க முடியாது என்பதற்காகவே இந்த முடிவை பி.சி.சி.ஐ எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -