இலங்கை அணிக்கு எதிரான தொடரை அடுத்து இன்று மற்றொரு தொடரையும் கேன்சல் செய்த பி.சி.சி.ஐ – அதிகாரபூர்வ அறிவிப்பு

BCCI
- Advertisement -

இந்திய அணி மார்ச் மற்றும் மே மாதங்களில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த சுற்றுப்பயணம் முன்னறிவிப்பின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் தள்ளி வைக்கப்பட்டது.

ind vs sl

- Advertisement -

இந்நிலையில் தற்போது இலங்கை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த விடுபட்ட தொடரை நடத்திவிடலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் ஐ.பி.எல் தொடரையும் நடத்த ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால் இதனை தொடர்ந்து தற்போது இந்த செய்தி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

sl

கொரோனா வைரஸ் தாக்கம் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த இலங்கை மற்றும் ஜிம்பாவே நாட்டில் சுற்றுப் பயணத்தை ரத்து செய்கிறோம். ஜூன் 24 முதல் இலங்கையில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது.

- Advertisement -

அதே போல் ஜிம்பாவேயுடன் ஆகஸ்ட் 22ம் தேதி சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த இரண்டு தொடர்களையும் ரத்து செய்கிறோம். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். இந்த இரண்டு தொடர்களையும் ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதனை தாண்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ க்கு மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதன்காரணமாக இந்த தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement