கவலைப்படாதீங்க.. எந்த மாற்றமும் இல்ல.. 2024 ஐ.பி.எல் தொடர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

IPL-and-BCCI
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டுக்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முதற்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

அதன்படி பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டிருந்த இந்த அட்டவணை பட்டியலில் முதல் 17 நாட்களில் 21 போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும் துவக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதற்கட்டத்தில் கடைசி போட்டியானது ஏப்ரல் 7-ம் தேதி லக்னோவில் நடைபெற இருக்கிறது. அந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதினால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்ட வேளையில் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதே வேளையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரானது வெளிநாட்டில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : அந்த விஷயத்தை ஒத்துக்கிறேன்.. தோனி இருந்த வரை வேற லெவல் பண்ணோம்.. குல்தீப் யாதவ் வெளிப்படை

மேலும் எவ்வித பாதிப்பும் இன்றி போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு அதற்கு ஏற்றார் போன்று அட்டவணை அமைக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த ஆண்டு முழுக்க முழுக்க ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement