எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் முற்றிலுமாக வெளியேறிய விராட் கோலி – பி.சி.சி.ஐ வெளியிட்ட காரணம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரரான விராட் கோலி போட்டி துவங்க சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த வேளையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து வெளியேறினார்.

அப்படி அவர் வெளியேறிய பிறகு வெளியான தகவலில் : விராட் கோலி முறைப்படி கேப்டன் ரோகித் சர்மாவிடவும், பயிற்சியாளர் டிராவிடமும் கலந்து ஆலோசித்த பிறகே அந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதோடு பிசிசிஐ-யும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அணியிலிருந்து விலகி இருக்கிறார் என்றும் அவரது விடயத்தில் யாரும் எந்த யூகங்களையும் யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

இப்படி விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியிலிருந்து விலகி இருந்தாலும் நிச்சயம் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் விராட் கோலியின் பெயர் இடம்பெறவில்லை.

அதனால் இங்கிலாந்து தொடரில் இருந்தே விராட் கோலி முற்றிலுமாக விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த விடயம் தற்போது அனைவரது மத்தியில் கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும் இப்படி விராட் கோலி இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலக என்ன காரணம்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விடயத்திற்கான தெளிவான விளக்கத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : விராட் கோலியின் பிரைவசியை நாங்கள் மதிக்கிறோம். அவர் எங்களிடம் முறைப்படி அவரது தனிப்பட்ட முடிவை தெரிவித்து விட்டே தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விடுப்பினை எடுத்துள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒரே ஒரு விடயம் தான் :

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு பிரச்சனையே அவர் தான்.. இந்திய வீரரை வெறுப்புடன் பாராட்டிய மைக்கேல் வாகன்

விராட் கோலி விலகல் குறித்து எந்த ஒரு வதந்தியையோ, யூகங்களையோ பரப்ப வேண்டாம். அவரது முடிவிற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே அவரது விடயத்தில் யாரும் எந்த தவறான தகவலையும் பரப்ப வேண்டாம் என பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் : விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாகத்தான் இந்த தொடரில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement