சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு முடிவை முறைப்படி ஏற்காத பி.சி.சி.ஐ – காரணம் இதுதானாம்

raina

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி நேற்று முன்தினம் இரவு தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அவரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இரட்டிப்பாக்க வகையில் தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களிலேயே தான் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தார்.

Raina-1

33 வயதான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 7787 ரன்களை அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டிலும் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி ஓய்வு குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் ரெய்னா தோனி ஓய்வு குறித்த அறிவிப்பு அவர்களால் உறுதி செய்யப்படவில்லை ஏனெனில் இது குறித்து விளக்கம் ஒன்றினை அளித்துள்ள பிசிசிஐ அதில் தெரிவித்ததாவது :

Raina

ஓய்வு பெறுவது குறித்த தகவலை முதலில் பி.சி.சி.ஐ யிடம் வீரர்கள் தெரிவிப்பது வழக்கம். அதன்படி தோனியின் அறிவிப்பை தாங்கள் பெற்றதாக வும் ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரெய்னா பொது வெளியில் இருந்து ஓய்வு அறிவித்தார். பிசிசிஐ-க்கு அவர் ஓய்வு முடிவை தாமதமாக தெரிவித்தார். அதன்காரணமாகவே நாங்கள் ரெய்னாவின் ஓய்வு முடிவை ஏற்க தாமதம் ஆனது என்று குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

Raina

மேலும் குறுகிய ஓவர் போட்டிகளில் அதாவது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். பல இக்கட்டான வேளைகளில் இந்திய அணியை அவர் மீட்டெடுத்து ரெய்னா என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது பிசிசிஐ.